Saturday, April 4, 2009

இயேசுவே என்னுடன்

இயேசுவே என்னுடன் நீ பேசு
என் இதயம் கூறுவதை கேளு
நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழி நடத்து

உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம்
உன் திரு இதயம் பேரானந்தம்
உன் திரு வாழ்வெனக்கருளும்
இறைவா இறைவா
உன் திரு வாழ்வெனக்கருளும்
உன் திரு நிழ‌லில் நான் குடி கொள்ள
என்று என்னுட‌ன் இருப்பாய்

இயேசுவின் பெய‌ருக்கு மூவுல‌கென்றும்
இணைய‌டி ப‌ணிந்து த‌லை வ‌ண‌ங்கிடுமே
இயேசுவே உன் பெய‌ர் வாழ்க‌ வாழ்க‌ வாழ்க‌
இயேசுவே உன் பெய‌ர் வாழ்க‌
இயேசுவே நீ என் இத‌ய‌த்தின் வேந்த‌ன்
என்னைத் த‌ள்ளி விடாதே

Thursday, January 22, 2009

உன் இதய வாசல்

உன் இதய வாசல் தேடி வருகின்றேன்
என் இதயம் உறைய என்னில் வாருமே
நீ இல்லையே நான் இல்லையே
நான் வாழ என்னுள்ளம் வா

காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்
காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதையா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனையா

குயில் பாட மறக்கலாம் மயில் ஆட மறக்கலாம்
நயமுடனே நண்பனும் என்னை விட்டுப்பிரியலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதையா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனையா

Thursday, January 15, 2009

உதயங்கள் தேடும்

உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே
இறையருள் மலர‌
வனங்கள் பூக்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க‌
வாரும் இறைகுலமே

இருளினில் தவித்திட்ட வேளையிலே- முழு
நிலவென நிலமதில் நடந்தவனே
துயரத்தில் தவித்திட்ட தருணங்களில்- வழித்
துணையென தோள் தந்த இறையவனே
பாவம் நம்மிலே மறையாதோ- தேவன்
பாதம் மனதிலே படராதோ
சோகங்கள் மறைந்திட அருள் தருவாய்

கவலைகளால் மனம் கலங்கையிலே -உந்தன்
கரங்களால் என்னைத் தாங்க வந்தாய்
ஆறுதல் தேடி நான் அலைகையிலே- உந்தன்
விழிகளில் கருணை மழை பொழிந்தாய்
புதிய உறவுகள் மலர்ந்திடவே -உந்தன்
அன்பின் பலியினில் கல்ந்திடவே
ஓர் குலமாய் ஒன்று கூடி வந்தோம்

இறைவா இதோ

இறைவா இதோ வருகின்றோம்- உம்
திரு உள்ளம் நிறைவேற்ற

கல்லான இதயத்தை எடுத்துவிடு -எமை
கனிவுள்ள நெஞ்சுடனே வாழ விடு-2
எம்மையே நாங்கள் மறக்கவிடு -கொஞ்சம்
ஏனையோர் துன்பம் நினைக்கவிடு

பலியென உணவைத் தருகின்றோம் -நிதம்
பசித்தோர்க்குணவிட மறக்கின்றோம்-2
கடமை முடிந்ததென நினைக்கின்றோம்- எங்கள்
கண்களைக் கொஞ்சம் திறந்துவிடு

அன்பின் திருக்குலமே

அன்பின் திருக்குலமே இறை
இயேசுவின் அரியணையே
எழுவோம் ஒருமனதாய் கூடித்
தொழுவோம் புகழ்பலியாய்
இறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம்
ம‌றையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம்

இருளின் ஆட்சியை முறியடிக்க அன்று
நிகழ்ந்த பலியை நினைப்போம்
இறைவன் மைந்தனே பலிப்பொருளாய் தன்னை
இழந்த தியாகம் உரைப்போம்
சுயநலம் மறைய சமத்துவம் வளர‌
அன்பு பரிவு கொண்ட இறைகுலம் வளர்ப்போம்

இறைவன் வார்த்தையை எடுத்துரைக்கும் இந்த‌
இனிய பலியில் இணைவோம்
உறவு விருந்தினை பரிமாறும் திரு
விருந்து பகிர்வில் மகிழ்வோம்
வலிமையில் வளர வாஞ்சையில் திகழ‌
வள்ளல் இயேசுவின் அழைப்பினை ஏற்போம்

அழைக்கும் இறைவன்

அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்
அனைத்தும் அவரின் சங்கமமாக விரைந்து வாருங்கள்
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே-2
படைத்த தேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்

பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார்
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே-2
படைத்த தேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்

வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார்
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே-2
இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்

Wednesday, October 1, 2008

அன்பின் வடிவே

அன்பின் வடிவே உயிரின் வடிவே
என்னைத் தேடும் இதய தெய்வம்
ஆராதனை ஆராதனை(2)

உயிரைக்கொடுக்கும் அன்பு
உறவில் மலரும் அன்பு(2)
உள்ளம் கவர்ந்த அன்பு
உயிரில் கலக்கும் அன்பு(2)
உயர்ந்து நிற்கும் அன்பு
உலகம் ஏங்கும் அன்பு
உண்மை பயக்கும் அன்பு
அன்பு செய்யும் அன்பு(2)

எங்கும் நிறையும் அன்பு
என்னைக் காணும் அன்பும்(2)
எதையும் செய்யும் அன்பு
எனக்காய் ஏங்கும் அன்பு(2)
என்னைக் காக்கும் அன்பு
என்னில் வாழும் அன்பு
என்றும் வாழும் அன்பு
அன்பு செய்யும் அன்பு(2)

பணிகள் புரிய வந்தாய்

பணிகள் புரிய வந்தாய் சீடர்
பாதம் கழுவி பணிந்தாய்
அன்பை வளர்க்கும் உறவாய் இயேசு
தன்னை ஈந்தார் உணவாய் -பணிகள்

தொட்டதும் தீர்ந்தது தொழுநோய்
சொல்லைக் கேட்டதும் அகன்றது அலகை
கேட்டதும் பலுகிய தப்பம் அதைப்
பகிர்ந்ததும் நின்றது பசியே.....

அழைத்ததும் பிறந்தது மாற்றம் அவ‌ர்
ஜெபித்த‌தும் வ‌ந்த‌து உயிரே
ம‌ன்னிப்பும் த‌ந்த‌து ம‌கிழ்ச்சி
அதை உண‌ர்ந்த‌தும் க‌னிந்த‌து வாழ்வே......

Tuesday, September 30, 2008

பாடுவாய் எந்தன் நாவே

பாடுவாய் எந்தன் நாவே மாண்புமிக்க இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர்தம்
பூதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த
‌தேவ இரத்த இரகசியத்தை எந்தன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப்படவே
மாசில்லாத கன்னியினின்று
நமக்கென்றே பிறக்கலானார்
அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான
‌வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே
வியக்கும் முறையில் முடிக்கலானார்

இறுதி உணவை அருந்த இரவில்
சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நியமனத்தின்
உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர்
பன்னிரண்டு சீடருக்குத்
தம்மைத் தாமே திவ்ய உணவாய்
தம் கையாலே அரிளினாரே

ஆணி கொண்ட உன்

ஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தால் உம்மைக் கொன்றேனே
ஆயனே என்னை மன்னியும்

வலது கரத்தின் காயமே-2
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது கரத்தின் காயமே-2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது பாதக் காயமே-2
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திருவிலாவின் காயமே-2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்