Wednesday, July 23, 2008

பூந்தென்றலே

பூந்தென்றலே அருளூற்றும் சுரம் பாடுதே
பூவின் அழகில் நெஞ்சம் பேசுதே....ஓ ..ஓ
உன்அன்பை காணுதே -பூந்தென்றலே

புதுராக சந்தத்திலே வண்டுகள் பாடும்
ஓடிவரும் ஓடை ஒலி தாளங்கள் போடும்-2
உன் அன்பின் உயரத்தையே மலைகள் சொல்லுமே
உன் அன்பின் ஆழத்தையே தாய்மை காட்டுமே
இதமான ராகங்களும் என்னில் தோன்றுமே....

கனிவான உன் முகத்தில் வெண்பனி ஒளிரும்
கண்வியக்கும் அழகுடனே தாரகை மிளிரும்-2
கடலும் வானும் அருவிகளும் உன்திறன் சான்றே
அன்பும் அருளும் பெருகிவரும் உன் திருக்கொடையே
வளமான கனவுகளும் கண்ணில் தோன்றுமே....

வருகின்றோம் இந்நாளில்

வருகின்றோம் இந்நாளில் நன்றி
காணிக்கை தருகின்றோம்(2)
கரம் பற்றி நடந்திடும் என் தலைவா
என் கிண்ணம் நிரம்பிட செய்திடுவாய்- வரு

உழைப்பினை எடுத்து வந்தோம்
உமக்கு அதன்பலன் தனை அர்ப்பணித்தோம்
மனிதத்தை வளர்த்திடவே நாங்கள்
உந்தன்தியாகத்தை வாழ்த்திடுவோம்
இறைவா... என் இறைவா....உம்
மலரடி பாதம் பணிந்திடுவோம்(2)
குறைகளை நீக்கி ஏற்றுடுவாய்
ஓளிர்ந்திடும் சுடராய் மாற்றிடுவாய் -வரு

ஏழைகள் உயர்ந்திடவே என்றும்
எங்கள்வாழ்வினை பகிர்ந்தளிப்போம்
சமனிலை தோன்றிடவே எங்கும்
பாவ‌பிரிவினை நீக்கிடுவோம்
உயிரே...என் உறவே...புதுவசந்தம்
விரைவில் மலர்ந்திடவே(2)
ஏழையின் துயரம் போக்கிடவே
ஏற்றிடு எங்களின் கணிக்கையை- வரு

நீயே எந்தன் தெய்வம்

நீயே எந்தன் தெய்வம்
நீயின்றி வேறேது சொந்தம்-2

ஆயிரம் மனிதரில் என்னைத் தேடினாய்
அன்பெனும் சிறகினுள் என்னை மூடினாய்
ஆ....ஆ....ஆ....ஆ......ஆயிரம்
கண்ணென காத்திட எந்தன் நெஞ்சில் வா
வாகவலையின்றி நான் வாழ என்னில் எழுந்து வா -நீயே

விடியுமோ பொழுதென விழிகள் கலங்கலாம்
வீணென என் மனம் சோர்ந்து போகலாம்
ஆ....ஆ....ஆ....ஆ.....விடியுமோ
துணைவரும் அருளினால் என்னைத் தாங்க வா வா
துயரின்றி என் விழி மெல்ல மூட நீ வா -நீயே

நன்றி என்று சொல்லி

நன்றி என்று சொல்லி
எந்தன் நெஞ்சம் உன்னில் வாழும்
எந்த நாளும் உந்தன் அன்பை தேடும்
அது துள்ளி வரும் தென்றலிலே
புத்தம் புது கவினூறு
மன்னவனின் புகழினைப் பாடும்

விழிகளில் தொடர்ந்திடும் ஏக்கம் அது
கதிர் கண்ட பனி போல மாறும்-2
இதயத்தில் இனிய ராகங்கள் உதயமாகுமே
உள்ளங்களில் நீ வாழ
‌உறவுகள் நான் கூட‌
உன் வாசல் தேடி வருவேன்
என் மன்னவனே! - நன்றி

உருவத்தில் தெரிகின்ற தெய்வம்
நம்இதயத்தில் வாழ்ந்திட வேண்டும்-2
மனிதரே தெய்வம் வாழ்ந்திடும் கோயில் ஆகுமே
புத்தம் புது பூமி ஒன்று
நீயும் வந்து வாழ இங்கு
உன் வாசல் தேடி வருவேன்
என் மன்னவனே !- நன்றி

கடவுளின் வார்த்தை

கடவுளின் உயிருள்ளது
ஆற்றல் மிகுந்தது
ஆவியில் மலர்ந்தது நல்வழி சேர்ப்பது
இதயத்தை அறிவது- கடவுளின்

சோகங்கள் சூழ்ந்திடும் வாழ்வினிலே
ஆறுதல் அளித்திடும் வார்த்தையிது-2
நம்பிக்கை இழந்து சோர்ந்தவர்க்கு
புது ஒளி தந்திடும் வார்த்தையிது
அமைதியை அருளும் வார்த்தையிது
ஆற்றலை தந்திடும் வார்த்தையிது- கடவுளின்

துயர்களும் தடைகளும் கடந்து வர‌
துணிவினைத் தந்திடும் வார்த்தையிது-2
நீதியும் அன்பும் நிலைத்து எழ
நேர்வழி காட்டிடும் வார்த்தையிது
ஏற்றத் தாழ்வுகள் தகர்ந்து விழ‌
சமத்துவம் படைக்கும் வார்த்தையிது - கடவுளின்

ஆரிராரிரோ

ஆரிராரிரோ என் கண்ணே நீ தூங்கு
என் அன்பே ஆரமுதே கண்மணியே நீ தூங்கு

அழியாத ஆன்மாவின் விருந்தாகவே
என்னில் எழுந்தே நீ வா - உன்
ஆன்மீக ராகங்கள் உயிர் வாழவே
என்னில் இசை பாடவா
கண் இமை மூட மறந்தே நான் காத்திருந்தேன்
தெய்வமே செல்வமே- நீ
என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடிவா அருள் கோடி தா

அமுதாக ஆன்மாவில் வருகின்றவா
என்னை உருவாக்க வா
நல் அணையாத தீபமாய் திகழ்கின்றவா
ஆன்ம ஒளியேற்றவா
சிறுதிரியாக உலகெங்கும் ஒளியேற்றுவேன்
தெய்வமே செல்வமே- நீ
என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடிவா அருள் கோடி தா

நான் தேடும் ஒரு நிறைவு

நான் தேடும் ஒரு நிறைவு உன்னில் கண்டு கொண்டேன்
வான் தேவன் உன் பிறப்பில் உனதன்பு கண்டேன்
வாரும் யேசுவே எங்கள் அன்பின் நேசரே

மண் படைத்தாய் விண் படைத்தாய்
நிறைவில்லை நிறைவில்லையோ
பொன் ப‌டைத்தாய் பொருள் ப‌டைத்தாய்
நிறைவில்லை நிறைவில்லையோ
எனைப் ப‌டைத்து எழில் ப‌டைத்தாய் நிறைவில்லையோ- இறைவா
நிறைவ‌டைய எம்மிடையே பிற‌ந்தாயோ - வாரும்

அன்பு இல்லை அமைதி இல்லை எம்மிடையே எம்மிடையே
உண்மையில்லை உவ‌கையில்லை உல‌கினிலே உல‌கினிலே
அன்பு இல்லை அமைதி இல்லை
உண்மை இல்லை உவ‌கை இல்லை
இந்த‌ நிலை மாறிட‌வோ அப்ப‌ வ‌டிவிலே- இறைவா
ம‌னுவுருவாய் மைந்த‌ர் எம்மில் ம‌ல‌ர்ந்தாயோ - வாரும்

யேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார்-2
ஆவலாய் தன் கரத்தை நீட்டி
அன்பாய் அழைக்கிறார்

இறைவனின் குலமே இயேசுவின் உள்ளமே
இதய அமைதி இனிதே அடைய
‌இயேசு அழைக்கிறார்(2)

கவலை மிகுந்தோரே கலங்கித் தவிப்போரே
கவலை நீக்க கலக்கம் போக்க
‌கடவுள் அழைக்கின்றார்(2)

உலகின் மனிதனே உன்னையே எண்ணிப்பார்
உலகம் அனைத்தும் உனதானாலும்
உனக்கு என்ன லாபம்(2)

Tuesday, July 22, 2008

அழகிய கவிதையில்

அழகிய கவிதையில் பாடிடுவேன்
அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன்

துன்ப சூழல்கள் சூழ்கையிலே
கவலை கறைகள் படர்கையிலே-2
அருளின் கைகள் வளைக்கையிலே
அமைதியில் நிலைப்பேன் ஆண்டவரில்

அறிவிலி எனையே அவர் நினைத்தார்
ஆற்றல் மிகவே எனக்களித்தார்-2
எதிரியினின்று விடுவித்தார்
எனவே அவர் என் ஆண்டவரே

அன்பே கடவுள் என்றால்

அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்
அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்

மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா-2
விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா

இறைவாக்கு சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா-2
மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமா

அளவில்லா அறிவுத்திறன் அன்புக்கு ஈடாகுமா-2
மலைபெயர் விசுவாசமும் அன்புக்கு ஈடாகுமா

உள்பொருள் வழங்கும் தன்மை அன்புக்கு ஈடாகுமா-2
என் உடல் எரிப்பதுமே அன்புக்கு ஈடாகுமா

நம்பிக்கை விசுவாசமும் நிலையாய் நின்றுவிடும்-2
நிலையாய் நிற்கும் அவை அன்புக்கு ஈடாகுமா