Wednesday, July 23, 2008

குறையாத அன்பு

குறையாத அன்பு கடல் போல வந்து
நிறைவாக என்னில் அலை மோதுதே அந்த
‌அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே-2

கண்மூடி இரவில் நான் தூங்கும்போது
கண்ணாக இயேசு எனைக் காக்கின்றார்(2)- உன்னை
எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண் மீது வழ வழி செய்கின்றாய் ஆ...ஆ....
நான் மண்மீது வாழ வழி செய்கின்றாய்

அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவில் முடிவாகுமே(2)- மண்ணில்
துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே ஆ...ஆ...
கண்ணீர் துடைக்கின்ற இயேசு அரசாகுமே

நெஞ்ச‌த்தில் வா

நெஞ்ச‌தில் வா என் தெய்வ‌மே
நீயாக‌ நான் மாற‌வே
உன்னை நான் க‌ண்டு உன் பாதை சென்று
நீயாக‌ நான் வாழ‌வே-2

என் உள்ள‌ம் நீ வ‌ந்து அம‌ர்கின்ற‌ நேர‌ம்
என் க‌ண்க‌ள் புதுப் ப‌ர்வை காணும்-2
என்னில் நீ ஒன்றான‌ நிலையான‌ உற‌வில்
புது வாழ்வு எனை வ‌ந்து சேரும்
எனில் வாழ்வ‌து இனி நீய‌ல்லவா-2
உன் வாழ்வு எந்தன் வ‌ழி அல்ல‌வா

உன்னோடு கைகோர்த்து நான் செல்லும் பாதை
ஒரு போதும் த‌வ‌றாவ‌தில்லை-2
என்னோடு நீ வாழும் சுக‌மான‌ நினைவில்
எதைக் க‌ண்டும் நான் அஞ்ச‌வில்லை
என் நெஞ்ச‌மே இனி உன் இல்ல‌மே-2
என்னோடு உட‌ன்வாழ‌ வா தெய்வ‌மே

வெண்புறா

வானம் திறந்து வெண்புறா போல‌
இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும்

யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கனுமே
அப்படியே இன்று நடக்கனுமே

மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறு ரூபமாக மாற வேண்டும்‍ - யோர்தான்

வரங்கள் கனிகள் பொழியனுமே
வல்லமையோடு வாழனுமே‍ - யோர்தான்

ஆவி என் மேலே

ஆண்டவரின் ஆவி என் மேலே
ஏனெனில் அவர் அபிஷேகம் செய்துள்ளார்(2)

எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும்
சிறைபட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்
தேர்ந்தெடுத்தார்

உன்னை அன்று அழைத்ததும் நாமே
உரிய பெயரை வைத்ததும் நாமே(2)
உன்னை அன்று மீட்டதும் நாமே
உனது துணையாய் இருப்பது நாமே- ஆண்டவரின்

நிறை உண்மைக்கு சாட்சி சொல்லவும்
நோயுற்றோரை குணமாக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்
தேர்ந்தெடுத்தார்

தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலை தான் கடந்தாலும்(2)
அருகிலேயே நாம் இருக்கின்றோம்
அழைத்து உன்னை வழி நடத்துகின்றோம்- ஆண்டவரின்

ஏழிசை நாதனே

ஏழிசை நாதனே எழுவாய் இறை
அருளை என்னில் நீ பொழிவாய்
பல‌வரங்கள் தந்து எனைக் காப்பாய்
வழி காட்ட எழுந்து வருவாய்

வாழ்வும் வழியும் நீ எனக்கு
வளங்கள் சேர்க்கும் அருமருந்து-2
உறவை வளர்க்கும் விருந்து -2- என்னில்
நிறைவை அளிக்கும் அருளமுது
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2

விழியும் ஒளியும் நீ எனக்கு
விடியல் காட்டும் ஒளிவிளக்கு-2
மனிதம் வாழும் தெய்வம்-2- என்னில்
புனிதம் வளர்க்கும் நல் இதயம்
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2

அழைக்கிறார் இயேசு

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட‌
அவர் ஒளியினில் நடந்திட‌-2
சாட்சிகளாய் என்றும் வழ்ந்திட இந்நாளிலே

தேடியே தேவன் வருகிறார்
தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தங்குவார்
துயரினில் நம்மை தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியை காட்டுவார்-2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

அன்பினில் உலகை ஆளுவார்
ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார்
ஆறுதல் நெஞ்சில் பொழியுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்-2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

நீயே நிரந்தரம்

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்
நான் வாழ்ந்த பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம் ....நிரந்தரம்.....நீயே நிரந்தரம்(2)

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்(2)
நிரந்தரம்...நிரந்தரம்.....நீயே நிரந்தரம்...(2)

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நினைவாழ்வு என்றும் நிஜமாவதில்லை நிரந்தரம்
அதன் விலையாக என்னை உன்னில் இணைப்பாய் நிரந்தரம்(2)
நிரந்தரம்....நிரந்தரம்.....நீயே நிரந்தரம்.....(2)



உலகமெல்லாம்

உலகமெல்லாம் எனக்காதாயம்
என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம்
என வாழ்ந்தால் கவலையில்லை
அழியும் செல்வம் சேர்ப்பதா
அழியா ஆன்மாவை காப்பதா
இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்‍- உலகமெல்லாம்

பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம்-2
எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை-2
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான்-2

அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை-2
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலமும் நிலைப்பதில்லை-2
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான்-2

தந்திட வருகின்றேன்

தந்திட வருகின்றேன்
நிறைவாய் என்னையே உமக்காக
‌இருப்பதை எல்லாம் கொடுக்கின்றேன்
கொடுத்தவர் நீர் அன்றோ (2) இறைவா - தந்திட‌

எனக்கென்று கொடுத்ததெல்லாம்
எடுத்துக்கொள் முழுவதும்-2
இளமையும் வளமையும் நான்வழங்கிட வறியவர்க்கே-2
வரம் தருவாய் இறைமகனே - தந்திட‌

என்னையும் உன்னைப் போல
‌உடைத்திட வருகின்றேன்-2
உலகோர் வாழ்ந்திடவும்உரிமைகள் அடைந்திடவும்
வரம் தருவாய் இறைமகனே - தந்திட‌

உந்தன் பாதச்சுவடுகளில்

உந்தன் பாதச்சுவடுகளில் இறைவா
பயணம் தொடங்குகிறேன்
உந்தன் பணிக்காக நான் பலியாக எனை
அழைத்தாய் வந்தேனய்யா‍‍- உந்தன்
உமது பாதையில் பயணம் தொடர்வேன்
பயணம் தொடர்வேன்... பயணம் தொடர்வேன்....

அழைத்தவனே என்னை அழைத்தவனே- உந்தன்
ஆற்றலை நாடுகின்றேன்
உயிர்த்தவனே நின் உயிர்த்த ஆவியால்
ஊக்கம் வேண்டுகின்றேன் - அழைத்தவனே
புதுச்சமுதாயம் வடிவமைக்கும்- உந்தன்
புனித கரங்களாய் மாறிடவே (2)- உந்தன்

மலர்களிலே வண்ண மலர்களிலே உந்தன்
நறுமணம் கமழ்வது போல்
மணங்களிலும் என் மனதினிலும்- உம்
அருள்மனம் சேர்த்தருளும் - மலர்களிலே
இதயங்களை நான் ஈர்த்திடுவேன் உந்தன்
இனிய வானரசின் உறவாக(2)- உந்தன