Friday, July 25, 2008

உன்னில் நான் ஒன்றாக

உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக‌
என்னில் வா என் மன்னவா-2

நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்
துணையாளன் நீயல்லவா(2)
எனைநாளும் பிரியாமல் உயிரோடு உயிராக
‌இணைகின்ற என் மன்னவா-2

முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி
மூன்றாகி ஒன்றானவா(2)
இனிதாக கனிவாக அருள்வாழ்வின் நிறைகாணும்
எனைத் தேர்ந்த என் மன்னவா-2

நிலம் வாழ நீராகி மலர் வாழ ஒளியாகி
நலம் சேர்க்கும் என் மன்னவா என்(2)
உளமென்னும் மலர் வாழ அன்பென்னும் மனம்நழ்கும்
இளந்தென்றல் நீயல்லவா-2

இறையவனே என்

இறையவனே என் வழித்துணை நீயே
இறைஞ்சிடும் ஏழையில் வாழ்க
‌வாழ்க ... வாழ்க‌

திசை தெரியாத மரக்கலம் போல‌
திரிந்திடும் வாழ்வு உனதொளி காண‌-(2)
கலங்கரை தீபம் எனக்கு நீயாவாய்
நலந்தரும் வான உணவென வாராய்

இக வழியாக அக ஓளியாவாய்
பகைமையை நீக்கி புது உறவாவாய்-(2)
தகுதியில்லாத எளியனைத் தேடி
எழுந்துள்ளம் வாழ இறைவனே வாராய்

பழம்பெரும் பாவ மனிதனை நீக்கி
வளம்தரும் தேவ மகனுனில் சேர்த்து-(2)
புது மனுவாக வதிந்திக வாழ்வை
முடித்திட ஆசி அருளிட வாராய்

இயேசு நாமம் பாட

இயேசு நாமம் பாடப்பாட‌
இனிமை பொங்குதே அவர்
இல்லம் வாழ எந்தன் இதய‌ம்
ஏங்கித் த‌விக்குதே

ஓங்கும் குர‌லைக் காக்க‌ வேண்டும்
உன் நாம‌ம் பாட‌வே
என் உள்ள‌ம் தேற‌வே என் தாக‌ம் தீர‌வே
உன் அன்பில் வாழ‌வே
என் தேவா தேவா வா....

ஏங்கும் விழிக‌ள் தேற்ற‌ வேண்டும்
வான் தீப‌ம் காண‌வே
என் அன்பில் வாழ‌வே உன்னோடு சேர‌வே
என்னில் நீ வாழ‌வே
என் தேவா தேவா வா....

Thursday, July 24, 2008

இதய இமைதி

இதய இமைதி பெறுகின்றோம்
இந்த விருந்திலே
இனிய வரங்கள் பெருகின்றோம்
இறைவன் உறவிலே
மனதில் தோன்றும் கவலைகள் மறையும்
இறைவன் வரவிலே

உருகும் உள்ளம் மலர்ந்திடும்
உயர் நற்கருணை பந்தியிலே
பெருகும் கண்ணீர் உலர்ந்திடும்
இறைவன் கருணை கரத்திலே

ஆயன் உலகில் கிறிஸ்துவே
அவர்தம் ஆட்டுக் கிடையிலே
புனித வாழ்வு அடையவே
புசிக்கத் தந்தார் உடலையே



அன்பெனும் வீணையிலே

அன்பெனும் வீணையிலே- நல்
ஆனந்த குரலினிலே
ஆலய மேடையிலே உன்
அருளினை பாடிடுவேன்

அகமெனும் கோவிலிலே - என்
தெய்வமாய் நீ இருப்பாய்-2
அன்பெனும் விளக்கேற்றி - உன்
அடியினை வணங்கிடுவேன்

வாழ்வெனும் சோலையிலே - நல்
தென்றலாய் நீ இருப்பாய்-2
தூய்மையெனும் மலரை- நான்
தான் மலர் படைத்திடுவேன்

தென்றலே கமழ்ந்திடுமே - என்
தெய்வமே நீ இருக்க‌-2
இன்பமே மலர்ந்திடுமே- நான்
உன்னிலே வாழ்ந்திருக்க‌

Wednesday, July 23, 2008

எல்லாம் உன் அருளே‍ !!

எல்லாம் உன் அருளே‍ இறைவா
எல்லாம் உன் கொடையே
நான் இருப்பதும் என் இயக்கமும்
நான் மலர்வதும் உன்னில் மறைவதும்
நான் பெற்றுக்கொள்ளாததில்லை இங்கு
நீயின்றி நானேதுமில்லைஎன் தேவனே எல்லாம் நீர் தந்தது
உன் தேவை நிறைவேற சரணாகதி...எல்லாம்

இந்த பூமியில் நான் வாழ்வதும்
உடலும் உள்ளமும் நலமாவதும சொந்த
‌உறவுகள் நான் காண்பதும்
பாசங்களில் நான் மகிழ்வதும்
அருளாலே நான் பெற்ற வாய்ப்பு உன்
அன்பாலே நான் பெற்ற அமைப்பு
என் தேவனே எல்லாம் நீர் தந்தது
உன் தேவை நிறைவேற சரணாகதி

என்னைத் தேர்ந்ததும் என்னில் சேர்ந்ததும்
எங்கெங்கும் நான் காணும் எழில்களும்
என் திறமைகள் என் உரிமைகள்
நீதியில் நான் கொண்ட காதலும்
உன்னோடு நான் கொள்ளும் உறவும்
இவ்வுலகோடு நான் கொள்ளும் பரிவும்
என் தேவனே எல்லாம் நீர் தந்தது
உன் தேவை நிறைவேற சரணாகதி

உன் பாதம்

இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காக தருகின்றேன்-2
மலைகளில் விழுந்து மனமென நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து.....இறைவா

பசி உள்ளோர்க்கு உணவாக நான் இருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன்-2
விழுந்தவரை தூக்கிடுவேன்- இங்கு
நலிந்தவரின் துணையிருப்பேன்- இதுவே
நான் தரும் காணிக்கையே இறைவா

இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன
கையில்இருப்பதை கொடுப்பதே இன்பமென்றாய்-2
பலியை அல்ல இரக்கத்தையே- என்னில்
விரும்புகின்ற இறைமகனே- உனைப்போல்
நானும் உருவாகிட ......இறைவா

என்னுயிர் தெய்வம்

என்னுயிர் தெய்வம் இயேசுவே என்னில் வருவீர்
வாழ்விக்கும் தெய்வம் வழித்துணையாகிடுவீர்
நீயாக நான் மாற வேண்டும் எந்நாளும்
அன்பாலே ஆட்கொள்ள வேண்டும்வாழும் தெய்வமே

வாழ்வு தரும் உணவாக என்னில் வருவாயே
வழிகாட்டும் ஒளியாக என்னில் எழுவாய்-2
தேவனே ஜீவனே என் உயிரில் கலந்திட வா-2
தினமும் உன்னில் இணைந்து மகிழ்வேன்
அன்பே உன்னை நினைந்து உருகி
ஆனந்தம் கண்டிடுவேன்-2

தேடுகின்ற ஆயனாக என்னைத் தேடியே
தேற்றுகின்ற தாயாக என்னைத் தாங்குவாய்-2
அன்பனே நண்பனே என் உள்ளம் நிறந்திடவா-2
வாழ்வில் என்றும் வளமே காண
‌அருளின் செல்வம் அன்பின் தெய்வம்
என் மனம் எழுந்திடுவாய்-2

உயிருள்ள உணவு

நானே வானின்று வந்த உணவு‍ என்னை
உண்பவன் என்றுமே வாழ்வான்
என்று சொன்ன இயேசுவே

உணவாக வா என் துணையாகவா
என் மன வானிலே என் சொந்தமாகவா-2

தீராத தாகத்தில் தவிக்கின்ற நெஞ்சம்
தினம் தினம் போராடி சோர்வுற்று அஞ்சும் தாகம்
கொண்டோர்களை சுமை சுமந்தோர்களை-2- அன்பால்
கைதூக்கி களைப்பாற்றும் என் இயேசுவே-2

வாழ்வுக்கும் உணவாக நீ வந்த நேரம்
நோய் தீர்க்கும் மருந்தாக தினம் என்னை காரும்
உள்ளம்உடைந்தோர்களை மாண்பு இழந்தோர்களை-2- உந்தன்
பாசத்தால் அணைக்கின்ற என் இயேசுவ-2



என்னை தந்திட‌

என்னைத் தந்திட எழுந்து வருகிறேன்
எல்லாம் தந்த உந்தன் அருளோடு வாழவே-2

மாறிட மறுக்கும் என் மனதினை தருகிறேன்
மாற்றம் வேண்டியே என்னைப் படைக்கிறேன்-2
இழந்து நான் பலியாகி இறை உன்னை
தந்திடவே ஏற்றிடு மாற்றிடு
எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு

பகைமை வளைக்கும் என் உணர்வினை த‌ருகிறேன்
பாசம் வளர்த்திட உன் உறவினை கேட்கிறேன்-2
உறவின் கரமாகி உனதருளை
கண்டிடவே ஏற்றிடு மாற்றிடு
எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு