அதிசங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார்
தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம்(2)
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய்
மாற்றினார் அதிசயம்
செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2)
புயல் காற்றைத் தம் ஆணையாலே
அடக்கினார் அதிசயம்
குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2)
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்
Friday, September 5, 2008
அன்பனே விரைவில்
Tuesday, September 2, 2008
வாழ்வைப் பலியாய்
வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன்
என்னையே ஏற்றிடுவாய்
முழுமனதுடனே கையளிக்கின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய்
கோதுமை மணியும் திராட்சை கனியும்
புது உரு பெறுவது போல்(2)
அன்பும் அமைதியும் நீதியுமே
மனிதனில் மலர்ந்திட உயிர் தருவோம்
நான் வாழப் பிறரும் பிறர் வாழ நானும்
தேவை என்றுணர்ந்தேன்(2)
சமத்துவ சகோதர நோக்குடனே
புது யுகம் காண்போம் அகத்தினிலே
என்னையே ஏற்றிடுவாய்
முழுமனதுடனே கையளிக்கின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய்
கோதுமை மணியும் திராட்சை கனியும்
புது உரு பெறுவது போல்(2)
அன்பும் அமைதியும் நீதியுமே
மனிதனில் மலர்ந்திட உயிர் தருவோம்
நான் வாழப் பிறரும் பிறர் வாழ நானும்
தேவை என்றுணர்ந்தேன்(2)
சமத்துவ சகோதர நோக்குடனே
புது யுகம் காண்போம் அகத்தினிலே
பொன்னும் பொருளும்
பொன்னும் பொருளிமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லைஉன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்(2)
சொந்தம் பந்தமுமெல்லாம் நீயேயெனச் சொல்லிவந்தேன்
எந்தையும் என் தாயும் நீயன்றோ நீயோ
என்னை ஆளும் மன்னவனன்றோ
நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ- என்
நிம்மதி இழந்து நின்றேன்
வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான்
அளவில்லா பாவம் செய்தேன்
தனது இன்னுயிரை பலியெனத் தந்தவரே
உனக்கு நான் எதையளிப்பேன்- இன்று
உனக்கு நான் எனையளித்தேன்
வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
ஒழிந்திட உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
நிலைத்திட பணி செய்வேன்
தனது இன்னுயிரை பலியெனத் தந்தவரே
உனக்கு நான் எதையளிப்பேன் இன்று
உனக்கு நான் எனையளித்தேன்
பலியென எனை
பலியென எனைத் தருவேன்- உம்
பலியினில் எனை இணைத்தேன்
பகிர்தலில் நாளும் வளர
பணிந்தே எனைத் தருவேன்
வாழ்வது நானல்ல எந்தன் இயேசுவே வாழ்கின்றீர்
எந்தன் உடல் பொருள் ஆவி எல்லாம்
உமக்கே தருகின்றேன்-2
என்னையே ஏற்று வாழ
உமதருள் கேட்கின்றேன்-2
திராட்சை கொடி என்றீர்-அதன்
கிளைகள் நீர் என்றீர்
எனக்குள் இருப்போரெல்லாம்
என்றுமே வாழ்வாரென்றீர்-2
பிறரையே ஏற்று வாழ
உம் வரம் கேட்கின்றேன்-2
பலியினில் எனை இணைத்தேன்
பகிர்தலில் நாளும் வளர
பணிந்தே எனைத் தருவேன்
வாழ்வது நானல்ல எந்தன் இயேசுவே வாழ்கின்றீர்
எந்தன் உடல் பொருள் ஆவி எல்லாம்
உமக்கே தருகின்றேன்-2
என்னையே ஏற்று வாழ
உமதருள் கேட்கின்றேன்-2
திராட்சை கொடி என்றீர்-அதன்
கிளைகள் நீர் என்றீர்
எனக்குள் இருப்போரெல்லாம்
என்றுமே வாழ்வாரென்றீர்-2
பிறரையே ஏற்று வாழ
உம் வரம் கேட்கின்றேன்-2
தருகின்ற நேரம்
தருகின்ற நேரம் எம்மைத்
தருகின்ற நேரம்
காணிக்கையாக உம்மில் நாங்கள்
இணைகின்ற நேரம்(2)
உயிரும் உடலும் உறவும் உணர்வும்
வாழ்வும் வளமும் வசந்தத்தின் நிறைவும்(2)
உந்தன் பெருங்கொடையே- நீ
எமக்காய் தந்தவையே
உந்தன் படைப்புக்களே- நீர்
எமக்காய் தந்தவையே
இன்று உம்மில் இணைய வருகின்றோம்
உமக்காய் எம்மைத் தருகின்றோம்- தருகின்ற
தருகின்ற நேரம்
காணிக்கையாக உம்மில் நாங்கள்
இணைகின்ற நேரம்(2)
உயிரும் உடலும் உறவும் உணர்வும்
வாழ்வும் வளமும் வசந்தத்தின் நிறைவும்(2)
உந்தன் பெருங்கொடையே- நீ
எமக்காய் தந்தவையே
உந்தன் படைப்புக்களே- நீர்
எமக்காய் தந்தவையே
இன்று உம்மில் இணைய வருகின்றோம்
உமக்காய் எம்மைத் தருகின்றோம்- தருகின்ற
கொடுப்பதன் இன்பம்
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லைதந்தேன் என்னையே அன்புடனே
சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன்(2)
தருவதில் பெறுவோம் விண்ணக வாழ்வை
தந்தேன் என்னையே அன்புடனே(2)
சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன்-2
அப்பமும் ரசமும் தருவதின் வழியே
தந்தேன் என்னையே அன்புடனே(2)
சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன்-2
Monday, September 1, 2008
காணிக்கை தரும் நேரம்
காணிக்கை தரும் நேரம்- நான்என் மனம் தருகின்றேன்-2
ஏற்றருளும் தெய்வமே
எளியவன் தருகின்ற காணிக்கையை-2
படைப்புக்கள் பலவாகினும்
பரமன் உமக்கே சொந்தம் -2-அதில்
மலராகும் என் மனம் உன்னிடத்திலே-2
மணம் காண ஏற்றிடுமே-2
பிறரன்பு பணிகளெல்லாம்
தலைவன் உமதன்றோ-2- என்றும்
உமதன்புப் பலியினில் என் வாழ்வினை-2
பலியாக ஏற்றிடுமே-2
காணிக்கை தந்தோம்
காணிக்கை தந்தோம் தேவா-எம்மைகனிவோடு கரம் தாங்கி ஏற்பாய்-2
எம் வாழ்விலே உம் கனவை வாழ-2
அருளாகி நிறைவாக தினந்தோறும் தாரும்
மனுவாக வந்தாய் மண் வாழ்விலே
நலமான இறையாட்சியே-2
மனித நலம் காக்க மாண்போடு வாழ-2
எம் உயர்வையும் பிறர் உயர்வையும்
உம் பாதம் வைத்தோம்(2)
இறைவா எங்கள் தலைவா
நிறைவாய் வரங்கள் தருவாய்-2
நலமாக எந்நாளும் உருவாகவே
நலம் காணும் நல்வாழ்விலே-2
சாதி சமயம் நீங்க சம வாழ்வு ஓங்க-2
எம் உணர்வையும் பிறர் உணர்வையும்
உம் பாதம் வைத்தோம்-2
இறைவா எங்கள் தலைவா
நிறைவாய் வரங்கள் தருவாய்(2)
காணிக்கை காணிக்கை
காணிக்கை காணிக்கைகாணிக்கையாக வருகின்றோம்
ஏற்றிடுவாய் மாற்றிடுவாய்
என்னையும் பலியினில் சேர்த்திடுவாய்
கோதுமை மணியும் திராட்சை இரசமும்
உம்மிடம் கொண்டு வந்தோம்
நேரிய உழைப்பும் உழைப்பின் பயனும்
உமக்கே கையளித்தோம்
இன்றைய பொழுதில் செய்பவை அனைத்தும்
உம்மிடம் படைக்க வந்தோம்
எம் செயலனைத்தும் உம் செயலாக
மாற்றிட கூடி வந்தோம் - காணிக்கை
Subscribe to:
Posts (Atom)

