Tuesday, July 22, 2008

இயேசு இயேசு என்று

இயேசு இயேசு என்று அழைத்து
பேசு பேசு உன் கதையை - உந்தன்
குரலை கேட்டு உன்னை மீட்டு
வானகம் சேர்க்கும் தேவனவன்

வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்
சுடராய் அணையா ஒளியாய்
வந்தார் மாபரன் இயேசு - உயிர்
தந்துணை மீட்டார் இயேசு
கல்வாரி சிகரமதில்

பாவிகள் ந‌ம்மை மீட்கவே உலகில்
ஆதவனாய் ஒளிர்ந்தெழுந்தார்
போதனைகள் பல தந்து - நம்மை
வேதனை விட்டெழச் செய்தார்
கல்வாரி சிகரமதில்

உன் திருயாழில்

உன் திருயாழில் என் இறைவா
பல‌பண்தரும் நரமுண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே
அதில்இணைத்திட வேண்டும் இசையரசே

யாழினை நீயும் மீட்டுகையில்
இந்த‌ஏழையின் இதயம் துயில் கலையும்
யாழிசை கேட்டு தனை மறந்து -உந்தன்
ஏழிசையோடு இணைந்திடுமே

விண்ணக சோலையின் மலரெனவே
திகழ்எண்ணில்லா தாரகை உனக்குண்டு
உன் அருள் பேரொளி நடுவினிலே -நான்
என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன்

உன் புகழை பாடுவது

உன் புகழை பாடுவது
என் வாழ்வின் இன்பமய்யா
உன் அருளை போற்றுவது
என் வாழ்வின் செல்வமய்யா

துன்பத்திலும் இன்பத்திலும் -நல்
தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயர காத்திருக்கும்- நல்
அன்னையாய் அருகிருப்பாய்
அன்பு என்னும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன் நின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய்-2

பல்லுயிரை படைத்திருப்பாய்
நீ என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும்
நீ என்னையும் ஏன் அழைத்தாய்
அன்பினுக்கு அடைக்கும் தாழ்
ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2

என் ஆன்மா இறைவனையே

என் ஆன்மா இறைவனையே
ஏற்றி போற்றி மகிழ்கின்றது
என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது

தாழ் நிலை இருந்த தம் அடியவரை
தயையுடன் கண்கள் நோக்கினார்
இந்நாள் முதலாம் தலைமுறைகள்
எனைப்பேறுடையாள் என்றிடுமே

ஏனெனில் வல்லமை மிகுந்தவரே
எனக்கரும் செயல் பல புரிந்துள்ளார்
அவர்தம் பெயரும் புனிதமாகும்
அவருகஞ்சுவோர்க்கு புனிதமாகும்.



என் வாழ்வில் இயேசுவே

என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன்எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் ஆறாமல் நான் வடும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத்தாயாக நீ மாற வேண்டும்

பாரங்கள் தாங்காமல் சாய்கின்றபோது
பாதங்கள் நீயாக வேண்டும்- எந்தன்
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும்போது
ஓடங்கள் நீயாக வேண்டும்- வரும்

போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும்போது
பாலங்கள் நீயாக வேண்டும் -இணை
தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்
பாடங்கள் நீயாக வேண்டும்- மறை

காலங்கள் எல்லாமும் என் நெஞ்ச வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும்- சுடர்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும்போது
மேகங்கள் நீயாக வேண்டும் -மழை

நீ எந்தன் பாறை

நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
நீ எந்தன் உள்ளத்தில் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே -2

ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ
உன் துணையில் வாழ்க்கையில் துயர் வெல்லுமோ
தடை கோடி வரலாம் உளம் தவித்தோடி விடலாம்
ஆனாலும் உன் வார்த்தை உண்டு
எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு
இயேசுவே இயேசுவே -2

இரவுக்கும் எல்லை ஓர் விடியலன்றோ
முடிவாக வெல்லுவதும் நன்மையன்றோ
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம்
ஆனாலும் உன் வார்த்தை உண்டு
எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு
இயேசுவே இயேசுவே -2



இதயமே இதயமே

இதயமே இதயமே என்னில் எழுந்துவா
உதயமாய் மனதிலே ஒளியை ஏற்றவா
வாழ்விலே வலிமையாகவா
வசந்தமாய் என்னில் வாழ வா

எங்கும் எனதுள்ளம் நீயாக வேண்டும்
தாங்கிடும் உனது கரம் எனைக் காக்க வேண்டும்
நன்மை வடிவாக நாதா நீ வேண்டும்
நாளும் புது வாழ்வு நானாக வேண்டும்
துயரும் பிணியும் என்னை இங்கு சூழ்கின்றபோது
துணையாக் மருந்தாக நீ என்னில் வர வேண்டும்

வாழும் வாழ்வெல்லாம் நீயாக வேண்டும்
வசந்தம் என் வாழ்வில் நிலையாக வேண்டும்
மீளா துன்பங்கள் எனை நீங்க வேண்டும்
மீண்டும் உன் பாதம் நான் சேர வேண்டும்
தாயும் தந்தை யாவுமே நீயாக வேண்டும்
தயையோடு எனை நாளும் நீ நடந்திட வேண்டும்

என் தேடல் நீ

என் தேடல் நீ என் தெய்வமே
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உன்னை மனம் தேடுதே நீ வழி காட்டுமே

இறைவா இறைவா வ‌ருவாய் இங்கே
இத‌ய‌ம் அருகில் அம‌ர்வாய் இன்றே

ஒரு கோடி விண்மீன்க‌ள் தின‌ம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிற‌ர் அன்பை என் ப‌ணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் த‌ந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறை‌வாகுவேன்
ம‌றைவாழ்விலே நிலையாகுவேன்
வ‌ழிதேடும் எனைக் காக்க‌ நீ வேண்டுமே

உன்னோடு நான் காணும் உற‌வான‌து
உள்ள‌த்தை உருமாற்றி உன‌தாக்கிடும்
ப‌லியான் உனை நானும் தின‌ம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்ட‌லால் எனில் மாற்ற‌ங்க‌ள்
உன் தேட‌லால் எனில் ஆற்ற‌ல்க‌ள்
வ‌ழிதேடும் எனைகாக்க‌ நீ வேண்டுமே

அன்பென்னும் கொடையால்

உம் பணி வாழ்வையே எங்க‌ள் அகலாக ஏற்று
அயராது உழைப்போம் தளராது ஜெபிப்போம்
இயேசுவே...... இயேசுவே

அன்பென்னும் கொடையால் மனித வாழ்வை
அழியா உறவில் இணைக்கும் பணியை
நிறைவாய் வாழ்ந்த இறை மைந்தனே
எங்கள் அருள் வாழ்வின் வழிகாட்டியே - உம் பணி

சிறைபட்டோர் விடுதலை அடைய வந்தீர்
வறியவர் வாழ்வுக்கு வழி வகுத்தீர்(2)
உலகின் இடர்களை வென்றிடவே இறை
சித்தத்தில் நாளும் வாழ்ந்தவரே
நற்செய்தி முழங்கி நம்பிக்கை வாழ்வில்
புதிதாய் உலகை மாற்றினிரே

தந்தையின் அன்பை பகிர்ந்தவரே இறை
ஆவியின் ஏவுதல் நிறைந்தவரே(2)
ஆயிரமாயிரம் புதுமைகளால் அன்று
எளியவர் மனதை ஆட்கொண்டீர்
வாழ்வெனும் கடலில் அன்பெனும் படகாய்
எம்மிடம் வாழ்ந்திடும் பரம்பொருளே - உம் பணி

ஆண்டவர் எனது கற்பாறை

ஆண்டவர் எனது கற்பாறை
காவல் மிகுந்த மதில் கோட்டை
புகலிடமாம் கேட‌யமாம்
மீட்பின் வல்லமை அரண் அவராம்-2

சாவின் கயிறுகள் தெறித்தாலும்
அழிவின் சுழழில் நான் தவித்தாலும்(2)
கடவுளை நோக்கியே கதறியே அழுவேன்
மின்னலை தெறித்து துயரங்கள் துடைப்பார்

நீதி நெறிகளில் வாழ்ந்திடுவேன்
தெய்வ விதி வழி நடந்து வந்தேன்(2)
இதயத்தில் ஒளியை ஏற்றிட வந்தார்
துணையாய் என்றென்றும் என்னுடன் வருவார்