Saturday, August 16, 2008

ஆயராம் என் ஆண்டவர்

ஆயராம் என் ஆண்டவர் குறையேதும் எனக்க்கில்லையே
பசும்புல் வெளிதனில் இளைப்பாறவே செய்கிறார்
நீர் நிலை அழைத்துச் சென்று புத்துயிர் அளிக்கிறார்
தம்பெயர் கேற்பவே நீதிவழி நடத்துவார்

சாவின் இருளினிலே நான் நடந்திட நேர்ந்தாலும்
உம் துணை இருப்பதனால் அஞ்சிடத் தேவையில்லை
உம் கரக் கோலும் உறங்கா விழியும்
என்னைத் தேற்றிடுமே
உன் விழி ஓரப் பார்வையே போதும்
தீமைகள் அகன்றிடுமே - ஆயராம்

எதிரிகள் கண்முன்னே எனக்கு விருந்து தருகின்றீர்
பாத்திரம் நிரம்பிடவே தலையில் தைலம் பூசுகிறீர்
வாழ்ந்திடும் நாளெல்லாம் உம் அருள் நலமும்
பேரன்பும் புடை சூழும்
ஆண்டவர் இல்லம் நெடுநாள் வாழ்வேன்
அருட்கரம் எனைத் தேற்றும் - ஆயராம்

No comments: