
இறைவன் அழைப்பை ஏற்று அவரில் மகிழுங்கள் - இறையரசின்
இயேசுவில் நாமும் வாழ்ந்திட வேண்டும்
அவரின் பாதையிலே நாம் நடந்திட வேண்டும்(2)
அருளில் நனைந்திட வேண்டும்
அன்பில் வளர்ந்திட வேண்டும்- என்றும்
உறவில் இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும்(2)
ஆவியின் வரங்கள் நாம் பெற வேண்டும்
அவரின் ஆற்றலோடு பணிபுரிய வேண்டும்(2)
மனிதம் மலர்ந்திட வேண்டும்
புனிதம் அடைந்திட வேண்டும்- என்றும்
இறைவன் அரசு மண்ணில் நிலைக்க வேண்டும் (2)
No comments:
Post a Comment