
என்னையே முற்றிலும் அர்ப்பணித்தேன்
அன்பு வாழ்விற்கு அர்ப்பணித்தேன்(2)
பொன் பொருள் என்னிடம் இல்லை
உன் பொற்பதம் படைத்து நான் வாழ(2)
என் வாழ்வை உமக்கு கொடுக்கின்றேன்(2)
ஏற்றருளும் என் இறைவனே
என் தலைவனே என் தலைவனே-அர்ப்பணித்தேன்
வாழ்வின் பொருளை நான் இழந்தேன்- உன்
வாழ்வின் மகிமை நான் அறிந்தேன்(2)
உன் பாதம் பணிந்து நான் வாழ(2)
துணை செய்வாய் என் இறைவனே
என் தலைவனே என் தலைவனே - அர்ப்பணித்தேன்
No comments:
Post a Comment