
அலை அலையாக வருகின்றோம்
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம்
ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்
ஆடிடும் ஓடமாய் என் வாழ்க்கை(2)
மூழ்கிடும் வேளையில் என் தலைவா
உன் கரம் தானே எம்மை கரை சேர்க்கும்- பெரும்
புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளி இருக்க
நாளுமே எம்மை காத்திடும் உந்தன்- அருட்கரம்
ஆறுதல் தேடும் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றது(2)
தேற்றிட விளையும் எம் தலைவா உம்
தெய்வீக கரம்தானே எமைத் தேற்றும்- புதுப்
பிணியோ வரும் பிரிவோ துயர் தருமோ துணையிருக்க
நாளுமே அன்பாய் காத்திடும் உந்தன்- அருட்கரம்
1 comment:
உண்மையில் மிகப்பெரிய சாதனை ஐயா. இறைவன் அருளால் மிகப்பெரிய பணியைச் செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்.
Post a Comment