
தினமும் உணவாய்த் தம்மையே தருகின்றார்
ஒன்றாய் இணைந்து நாமும் வாழ
ஓருடல் பகிர்ந்து உள்ளம் உறைந்திடுவார் -தெய்வம்
மண்ணில் விழுந்த விதையாக
மடிந்தார் இயேசு உலகுக்காக
தன்னை இழந்தார் வையம் வாழ
தன்னலம் மறந்து நாமும் வாழ
பிறர் வாழ்ந்திட கரம் கொடுப்போம்
பலம் தந்து பாதையாவார்(2)- தெய்வம்
கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வம்
ஒன்றாய் வாழும் மனங்கள் தேடும்
அன்பால் அனைத்தும் கூடுமென்று
அன்பின் சிறகால் நம்மை மூடும்
மலர் மணமாய் மனம் வாழ
எழும் இயேசு தேவா வந்திடுக(2)- தெய்வம்
No comments:
Post a Comment