
என் நெஞ்சம் மகிழுமைய்யா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உன் இன்பம் பெருகுமைய்யா
மாணிக்கத்தேரோடு காணிக்கை வந்தாலும்
உனக்கது ஈடாகுமா
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்
உனக்கது ஈடாகுமா
வான்கொள்ளா பெருஞ்செல்வம் நீயன்றி வேறு
தானுன்டோ என் வாழ்வில் சொல்வாய் என்னுயிரே
தேனென்பேன் பாலென்பேன் தெவிட்டாத சுவையென்பேன்
உன் நாமம் என்னேபேன்
நிறையென்பேன் இறையென்பேன்நீங்காத நினைவென்பேன்
உன் நாமம் என்னென்பேன்
வான்கொள்ளா பெருஞ்செல்வம் நீயன்றி வேறு
தானுன்டோ என் வாழ்வில் சொல்வாய் என்னுயிரே
No comments:
Post a Comment