
பலபண்தரும் நரமுண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே
அதில்இணைத்திட வேண்டும் இசையரசே
யாழினை நீயும் மீட்டுகையில்
இந்தஏழையின் இதயம் துயில் கலையும்
யாழிசை கேட்டு தனை மறந்து -உந்தன்
ஏழிசையோடு இணைந்திடுமே
விண்ணக சோலையின் மலரெனவே
திகழ்எண்ணில்லா தாரகை உனக்குண்டு
உன் அருள் பேரொளி நடுவினிலே -நான்
என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன்
No comments:
Post a Comment