
அம்மா உன் ஆதரவே எம் பேரு
இதோ உன் தாயிவளே
எனும் இறை மொழியே
சதா உதவும் தயை பெருகும்
அன்னை உனைத் தந்ததமா- அம்மா
கல்வாரி பலியினிலே
எம்பாவம் சுமந்தவர்க்காய்
நல் ஆறுதலாய் நின்ற தாயே
இன்றெம் துணை வாராயோ - அம்மா
அம்மா நின் பரிந்துரையே
என் தேவன் புதுமைகளால்
தண்ணீர் ரசமாய் கனிந்தது போல்
எந்தை மனம் கசியச் செய்யும்- உம்மாலே
No comments:
Post a Comment