
வந்தாரை நலமாக்கும் அன்பே
ஆரோக்கியத் தாயே அம்மா
வேலை கிடைக்கும் என்று வேளைநகர் வந்து
வெருங்கையாய் சென்றாருண்டோ நல்ல
எந்தன் வேளை இன்றும் வரவில்லை
என்று சொன்ன இயேசு அன்று
உன் சொல்லில் இசைந்தாரன்றோ
உன் சொல்லில் வரம் வேண்டி வந்தோம்
காவல் கரங்கள் நீட்டி கருணை
சிரம் காட்டி கலங்காதே என்றாய் தாயே உந்தன்
அன்பை வேண்டி வந்து அல்லல்
சேர்ந்த எந்தன் வாழ்வில்
துதிப்பாடி உனைப் போற்றினோம்
தூயோனின் தூயான மாமரியே வாழ்க
No comments:
Post a Comment