
உள்ளமெல்லாம் தேடிடுமே தலைவா உன் உறவை என்னை
கரத்தில் பொறித்து காத்திடும் முதல்வா- தாய்
மறந்தாலும் மறவா தோழா
என் இறைவா என் இறைவா ....நெஞ்சுக்குள்ளே
சோகம் தாக்கும்போது என்னை அணைத்துக்காக்கும்
சுகத்தில் திளைக்கும்போது அகமும் புறமும் நிறையச்செய்யும்-2
என் உயிரோடு உயிரானவா
என் உயிர் ஆசை நீயே இறைவா
என் இறைவா என் இறைவா......
அடிமை விலங்கை உடைத்து உரிமை வாழ்வை வழங்கும்
மனிதம் வளர்க்க நாளும் மனதில் வளமும் கொடுக்கும்-2
விடுதலையின் நாயகன் நீயே
என் வரலாறு உன் வழிதானே
என் இறைவா என் இறைவா....... நெஞ்சுக்குள்ளே
No comments:
Post a Comment