
எழுந்து வருகின்றார்
எண்ணிலா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்
உதயம் காண விளையுமோர் மலரைப் போலவே
இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதே
பகலை மறைக்கும் முகிலாய் பல பழிகள் சூழ்ந்ததே
அந்த முகிலும் இருளும் குறையும் தீரமுழுமை தோன்றுமே
என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே
என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன்
என்றும் பகர்ந்த இறைவா என்னை இணைக்க வாருமே
உந்தன் அன்பு விருந்தை நாளும் அருந்திஅமைதி காணுவேன்
1 comment:
உதயம் காண விளையுமோர் மலரைப் போலவே
இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதே
இந்த வரிகள் உயிருள்ளவை. என்னை என் இளமைக் காலத்திற்குக் கொண்டு செல்லும் மந்திர வரிகள். மிகக் நன்றி நண்பரே.
Post a Comment