
ஆற்றல் மிகுந்தது
ஆவியில் மலர்ந்தது நல்வழி சேர்ப்பது
இதயத்தை அறிவது- கடவுளின்
சோகங்கள் சூழ்ந்திடும் வாழ்வினிலே
ஆறுதல் அளித்திடும் வார்த்தையிது-2
நம்பிக்கை இழந்து சோர்ந்தவர்க்கு
புது ஒளி தந்திடும் வார்த்தையிது
அமைதியை அருளும் வார்த்தையிது
ஆற்றலை தந்திடும் வார்த்தையிது- கடவுளின்
துயர்களும் தடைகளும் கடந்து வர
துணிவினைத் தந்திடும் வார்த்தையிது-2
நீதியும் அன்பும் நிலைத்து எழ
நேர்வழி காட்டிடும் வார்த்தையிது
ஏற்றத் தாழ்வுகள் தகர்ந்து விழ
சமத்துவம் படைக்கும் வார்த்தையிது - கடவுளின்
No comments:
Post a Comment