
ஏற்றி போற்றிடுதே
இந்த அடிமை என்னை அவர்
நினைந்ததனால் அந்த மீட்பரில்
நெஞ்சம் மகிழ்கின்றதே
வல்லவர் எனக்காய் பெரியன புரிந்தார்
வையகம் எனை தினம் வாழ்த்திடுமே
அருள் நிறை மரியே வாழ்க
ஆண்டவர் உம்முடனே
பெண்களுக்குள் பெரும் பேறுபெற்றீர்
வாழ்க மரியே வாழ்க
அவர் தம் பதம் பணிவோர் தலைமுறைக்கெல்லாம்
தயவருள்வார் அவர் தூயவராம்-2
அவர் தமதாற்றல் கரத்தினை நீட்டி
செறுக்கடைந்தோரை சிறகடித்தார்(2)- அவர்
வலியோரை உயர் இருக்கையின்றிறக்கி
எளியோரை மிக உயர்த்தி விட்டார்
பசித்தோரை பல நலன் கொண்டு நிரப்பி
செல்வரை வெறுங்கையறென விடுத்தார்-2
No comments:
Post a Comment