
இறைஞ்சிடும் ஏழையில் வாழ்க
வாழ்க ... வாழ்க
திசை தெரியாத மரக்கலம் போல
திரிந்திடும் வாழ்வு உனதொளி காண-(2)
கலங்கரை தீபம் எனக்கு நீயாவாய்
நலந்தரும் வான உணவென வாராய்
இக வழியாக அக ஓளியாவாய்
பகைமையை நீக்கி புது உறவாவாய்-(2)
தகுதியில்லாத எளியனைத் தேடி
எழுந்துள்ளம் வாழ இறைவனே வாராய்
பழம்பெரும் பாவ மனிதனை நீக்கி
வளம்தரும் தேவ மகனுனில் சேர்த்து-(2)
புது மனுவாக வதிந்திக வாழ்வை
முடித்திட ஆசி அருளிட வாராய்
No comments:
Post a Comment