
நிறைவாய் என்னையே உமக்காக
இருப்பதை எல்லாம் கொடுக்கின்றேன்
கொடுத்தவர் நீர் அன்றோ (2) இறைவா - தந்திட
எனக்கென்று கொடுத்ததெல்லாம்
எடுத்துக்கொள் முழுவதும்-2
இளமையும் வளமையும் நான்வழங்கிட வறியவர்க்கே-2
வரம் தருவாய் இறைமகனே - தந்திட
என்னையும் உன்னைப் போல
உடைத்திட வருகின்றேன்-2
உலகோர் வாழ்ந்திடவும்உரிமைகள் அடைந்திடவும்
வரம் தருவாய் இறைமகனே - தந்திட
No comments:
Post a Comment