
உதய தீபமாக வருகின்றோம்
உரிமை வாழ்வு வழங்கிட- புது
மனிதராக வருகிறோம்- உறவில்
வருகின்றோம் மலையென வருகின்றோம்
பலி பீடமேறி வருகின்றோம்
பலியாக வருகின்றோம்
தந்தையின் அரசை தரணி முழுதும் முழங்கிட- முழங்கிட
தலைவன் இயேசு வழியில் நடந்திட- நடந்திட(2)
சமத்துவம் நிறைந்த உலகைக் காண
சகோதர உணர்வில் ஒன்றாய் வாழும்
அருளையே நிறை அன்பையே
நாளும் வேண்டி வருகின்றோம்
வருகின்றோம் மலையென வருகின்றோம்
பலி பீடமேறி வருகின்றோம்
பலியாக வருகின்றோம் -உறவில்
உயர்வு தாழ்வு பிரிவினைகள் அகன்றிட- அகன்றிட
உண்மை அன்பு உலகில் பரவிட- பரவிட(2)
வறியவர் வாழ்வில் உயர்வைக் காண
எளியவர் துன்பம் என்றும் நீங்க
அருளையே நிறை அன்பையே
நாளும் வேண்டி வருகின்றோம்
வருகின்றோம் மலையென வருகின்றோம்
பலி பீடமேறி வருகின்றோம்
பலியாக வருகின்றோம் -உறவில்
No comments:
Post a Comment