
ஆறுதல் தருவது ஆலயம்
அடைக்கலமாகும் அத்தனை பேருக்கும்
அருள் தரும் இயேசுவின் ஆலயம்
ஆலயம்...ஆலயம்...ஆலயம்
நிம்மதி தேடும் மனிதர்களே நீங்கள்
இயேசுவை நாடுங்கள்
துன்பத்தில் தவிக்கும் உள்ளங்களே- அவர்
துணையைத் தேடுங்கள்
குறைகளைக் கூறி நிறைகளை கேட்டால்
கொடுக்கும் அவர் கரங்கள்
தடைகளை உடைத்து துயரத்தைத் துடைத்து
தருவார் பல வரங்கள்
அன்பெனும் பூச்சரங்கள்- தினம்
பொழிவது அவர் குணங்கள்
ஆனந்த வாழ்க்கை அனைவரும் வாழ
அவரிடம் வாருங்கள்- அமைதியை
ஏசுவின் ஆலயம் வர வேண்டும்- என்ற
எண்ணங்கள் பிறந்தாலே
இதயத்தை அழுத்திடும் பாரமெல்லாம்- இங்கு
விலகிடும் தன்னாலே
மனித நேயத்தை மனதில் வளர்ப்பது
மரிமகன் ஆலயமே- இங்கு
வேற்றுமை நீங்கி ஒற்றுமை தீபம்
ஏற்றிடும் நம் மனமே
ஆலய மணியோசை- நம்மை
வாழ்த்திடும் அருளோசை
ஆலய வாசலில் காலடி வைத்தால்
அமைந்திடும் நல் வாழ்க்கை -அமைதியை
No comments:
Post a Comment