skip to main |
skip to sidebar
அன்பின் வடிவே உயிரின் வடிவேஎன்னைத் தேடும் இதய தெய்வம் ஆராதனை ஆராதனை(2)உயிரைக்கொடுக்கும் அன்புஉறவில் மலரும் அன்பு(2)உள்ளம் கவர்ந்த அன்புஉயிரில் கலக்கும் அன்பு(2)உயர்ந்து நிற்கும் அன்புஉலகம் ஏங்கும் அன்புஉண்மை பயக்கும் அன்புஅன்பு செய்யும் அன்பு(2)எங்கும் நிறையும் அன்புஎன்னைக் காணும் அன்பும்(2)எதையும் செய்யும் அன்புஎனக்காய் ஏங்கும் அன்பு(2)என்னைக் காக்கும் அன்புஎன்னில் வாழும் அன்புஎன்றும் வாழும் அன்புஅன்பு செய்யும் அன்பு(2)
பணிகள் புரிய வந்தாய் சீடர் பாதம் கழுவி பணிந்தாய்அன்பை வளர்க்கும் உறவாய் இயேசுதன்னை ஈந்தார் உணவாய் -பணிகள்தொட்டதும் தீர்ந்தது தொழுநோய்சொல்லைக் கேட்டதும் அகன்றது அலகைகேட்டதும் பலுகிய தப்பம் அதைப்பகிர்ந்ததும் நின்றது பசியே.....அழைத்ததும் பிறந்தது மாற்றம் அவர்ஜெபித்ததும் வந்தது உயிரேமன்னிப்பும் தந்தது மகிழ்ச்சி அதை உணர்ந்ததும் கனிந்தது வாழ்வே......
பாடுவாய் எந்தன் நாவே மாண்புமிக்க இரகசியத்தைபாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர்தம்பூதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்ததேவ இரத்த இரகசியத்தை எந்தன் நாவே பாடுவாயேஅவர் நமக்காய் அளிக்கப்படவேமாசில்லாத கன்னியினின்றுநமக்கென்றே பிறக்கலானார்அவனி மீதில் அவர் வதிந்துஅரிய தேவ வார்த்தையானவித்து அதனை விதைத்த பின்னர்உலக வாழ்வின் நாளை மிகவேவியக்கும் முறையில் முடிக்கலானார்இறுதி உணவை அருந்த இரவில்சகோதரர்கள் யாவரோடும்அவர் அமர்ந்து நியமனத்தின்உணவை உண்டு நியமனங்கள்அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர்பன்னிரண்டு சீடருக்குத்தம்மைத் தாமே திவ்ய உணவாய்தம் கையாலே அரிளினாரே
ஆணி கொண்ட உன் காயங்களைஅன்புடன் முத்தி செய்கின்றேன்பாவத்தால் உம்மைக் கொன்றேனேஆயனே என்னை மன்னியும்வலது கரத்தின் காயமே-2அழகு நிறைந்த ரத்தினமேஅன்புடன் முத்தி செய்கின்றேன்இடது கரத்தின் காயமே-2கடவுளின் திரு அன்புருவேஅன்புடன் முத்தி செய்கின்றேன்இடது பாதக் காயமே-2திடம் மிகத்தரும் தேனமுதேஅன்புடன் முத்தி செய்கின்றேன்திருவிலாவின் காயமே-2அருள் சொரிந்திடும் ஆலயமேஅன்புடன் முத்தி செய்கின்றேன்
தேவாலய வலப்புறமிருந்து தண்ணிர்புறப்படக் கண்டேன் அல்லேலூயாஅந்த தண்ணீர் யாரிடம் வந்ததோஅவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்று கூறுவர்அல்லேலூயா-(3)ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்அவரது இரக்கம் என்றென்றும் உள்ளதுபிதாவும் சுதனும் தூய ஆவியும்துதியும் புகழும் ஒன்றாய் பெறுகஆதியில் இருந்தது போல இன்றும் என்றும்நித்தியமாகவும் ஆமென்
மாண்புயர் இந்த அனுமானத்தைதாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்பழைய நியம முறைகள் அனைத்தும்இனி மறைந்து முடிவு பெறுகபுதிய நியம முறைகள் வருகபுலன்களாலே மனிதன் இதனைஅறிய இயலாலாக் குறையை நீக்கவிசுவாசத்தின் உதவி பெறுகபிதா அவர்க்கும் சுதனவர்க்கும்புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்மீட்பின் பெருமை மகிமையோடுவலிமை வாழ்த்து யாவுமாகஇருவரிடமாய் வருகின்றவராம்தூய ஆவியானவர்க்கும்அளவில்லாத சம புகழ்ச்சிஎன்றுமே உண்டாகுக- ஆமென்
பதுவையோனே புதுமையில் புனிதாபார் புகழ் புண்ணியனேபாரில் எங்கள் குறையகலபரமனை வேண்டிடுவாய்(2)பாத்திரனே பரமனின் வழி திகழ் உயர்கோத்திரனே குருவானவனே(2)பாவியர் எங்கள் பாவவினை நீக்கிஉன்னத அருள் மழை பொழிந்திடுவாய்- உன்னதமரியன்னை மகனை திருக்கரம் ஏந்தும்அருந்தவ முனிவனே காவலனே(2)உள்ளங்கள் உருகி வேண்டிடும் எங்களின்குறைகளை நீக்க அருள் பொழிவாய்- குறைகளை
நம்புங்கள் ஜெபியுங்கள்நல்லது நடக்கும்துன்பங்களோ துயரங்களோசோதனையோ வேதனையோ(2)பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்(2)மனச்சுமையோ பாரங்களோஉடற்பிணியோ ஊனங்களோ(2)பதுவைப் புனிதர் பரிந்துரப்பார்எல்லாம் வல்லவர் நலம் தருவார்(2)வறியவரோ சிறியவரோமுதியோரோ இளையோரோ(2)பதுவைப் புனிதர் பரிந்துரப்பார்எல்லாம் வல்லவர் அணைத்துக் கொள்வார்(2)
ஓ பரிசுத்த ஆவியேஎன் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்இறைவா ஆராதனை செகின்றேன்என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னைத் தேற்றும்என் கடமை என்னவென்று காட்டும்அதைக் கருத்தாய் புரிந்திடத் தூண்டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறிப்பணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி எனை நடத்தும் ஓ....
மார்கழியில் உதித்த மன்னவனே உன்மகிமையைத் துறந்து மண்ணகம் வந்தாய்மனிதத்தை இழந்த இம்மண்ணில் நீமனுவாய் மலர்ந்து விந்தையுமானாய்வருந்தியே உழைத்தும் வறியவரானோர்உண்மையில் நடந்தும் ஊர்பழி சுமந்தோர்அன்புக்கு பணிந்து அவமானம் அடைந்தோர்அவனியை மாற்ற அடி உதை ஏற்றோர்இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்புனிதத்தில் வாழ்ந்து மனிதத்தை மறந்தோர்செல்வத்தில் திளைத்து செருக்குடன் வாழ்ந்தோர்அரியணை ஏறி அடக்கியே ஆள்வோர்அணு ஆயுதத்தால் அகிலத்தை அழிப்போர்இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்
நமக்காய் ஒரு குழந்தை- இந்த நானிலம் தவழ்ந்ததுநலிந்த நிலை மாறும் என்னும் நம்பிக்கை மலர்ந்ததுஆராரோ கண்ணுறங்கு உந்தன் ஊரேதோ கண்ணுறங்குவிண்ணகமோ மண்ணகமோ இல்லைஇரண்டும் உந்தன் பிறந்தகமோவானின் தூதர்களே இன்றுவாழ்த்து பாடுங்களேன்விண்ணகத்தில் என்றும் மகிமைதான்- ஆனால்மண்ணகத்தில் அமைதி எங்கேமாடடை குடிலில் பிறந்தவனே இந்த மானிடர் நடுவில் பிறந்தாலென்னஆடுகளே மாடுகளே நீங்கள்மாந்தரிலும் சிறந்தவரேமாந்தர் மைந்தர்கள் யாம்- எங்கள்வாழ்க்கை எண்ணுகின்றோம்மனித மாண்பு என்னவென்று- முற்றும்மறந்த கூட்டம் உண்டு இங்குமனிதனாய் பிறந்த இறைமகனே- எங்கள்மான்பினை எமக்கு கூறாயோவறுமை நோய் பிளவுகள்- இனிவாராதிருக்கச் செய்வாயோ
பூத்தது பார் புதுப்பொழுது பூமகன் வரவினிலே- இதைபூமி எங்கும் முழங்கிடவே புறப்படு இறைகுலமே- நம்இயேசுவின் பிறப்பினிலே புது வாழ்வும் மலர்ந்திடுமே இனிஎல்லான் நலம்தானே பல வளங்களும் பெருகிடுமேலல்லல்லா........இறைமகன் யேசு பிறந்தார்- ஏழைஎளியவர் மகிழ்வு கண்டார்மாபரன் இன்று பிறந்தார்- நம்பாவங்கள் போக்க வந்தார்இருளை நீக்க வந்தார்- அருள்ஒளியை ஏற்ற விளைந்தார்விண்ணும் மண்ணும் இணைய- அதில்இறைவன் புனிதம் கமழபாலன் இயேசு நம் மனங்களில் சிரிப்பார் மகிழ்வாய் மனமேஅன்புருவானவர் வந்தார்- மண்ணில்மனிதனாகப் பிறந்தார்அமைதியின் தூதன் பிறந்தார்- நம்அகமதில் நிறைவு தந்தார்பாசம் பரிவு கொண்டார்- நம்பாவம் யாவும் சுமந்தார்நம்மில் ஒருவரானார்- நம்இன்பம் துன்பம் பகிர்ந்தார்பாலன் இயேசு நம் மனங்களில் சிரிப்பார் மகிழ்வாய் மனமே
புத்தம் புதிய மலரே இந்த புவியில் உதித்த நிலவேபுதிய உலகின் விடிவே எங்கள்இதயம் தேடும் மகிழ்வே(2)ஆராரோ ஆரிரரோ ஆரிரராரோ(2)என்றும் வாழும் இறைமகனே உலகில் வந்தாயேஇன்று எங்கள் உடன் பிறப்பாய் மாறிவிட்டாயே(2)கண்ணின் மணியே கனியமுதே கண்வளராயோ(2)அன்பின் மகிமை உணர்ந்த எம்மை அன்பில் இணைப்பாயோபிறந்தநாள் வாழ்த்துக்கள்பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணைந்தே பாடுவோம்மனிதனே மழலையே மகிழ்ந்தே ஆடுவோம்பிறந்தநாள் வாழ்த்துக்கள்(2)ஈழவானில் எழும் கதிரே எங்கள் நம்பிக்கையேதாழ்த்தப்பட்டோர் தவித்து நிற்போர் வாழ்த்தும் உன் வரவே(2)துன்ப துயரம் துடைக்க வந்த கடவுளின் கரமே(2)உளமகிழ்வே இகம் முழங்கும் இன்னிசை சுரமேபிறந்தநாள் வாழ்த்துக்கள்பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணைந்தே பாடுவோம்மனிதனே மழலையே மகிழ்ந்தே ஆடுவோம்பிறந்தநாள் வாழ்த்துக்கள்(2)
பெத்லகேம் ஊருக்குச் சென்றிடுவோம்- அந்த பாலனைக் கண்டிடுவோம்பேரின்பம் அனைத்தும் குழந்தை வடிவில்ஒளிரும் காட்சியைக் கண்டிடுவோம்- பெத்லகேம்உண்மை ஒளியாய் உதித்ததேவேற்றுமை அகற்றப் பிறந்ததேஇறைமை வடிவைக் கொணர்ந்ததே-2மாமரியின் நல்மகனாய்மனித உரவை எடுத்ததே-2இருண்ட உலகை மீட்கவேமருண்ட மனதை தேற்றவேஉலகின் ஒளியாய் பிறந்தாரே-2உள்ளமதை கொள்ளை கொள்ளும்குழந்தை வடிவில் உதித்தாரே-2உள்ளங்கள் ஒன்று சேரவேஉரிமைகள் என்றும் நிலைக்கவேஉன்னத தேவன் உதித்தாரே-2ஊனுடலில் உருவெடுத்துஉண்மையை நாட்டிட பிறந்தாரே-2
பெத்லகேம் நகரிலே பூபாள ராகம் ஒன்று கேட்குதா இங்கு கேட்குதாஇடையர்கள் வியந்திட வானதூதர் பாடும் கானம் கேட்குதா உனக்கு கேட்குதாகனவான காலங்கள் நனவாகிட பாவங்கள் சாபங்கள் மறைந்தோடிடஇறைமகனும் பிறந்துவிட்டார் வாருங்களே பாருங்களேவார்த்தை வடிவிலே தந்தையோடு இருந்தவர் -தூயஆவியாலே மனிதன் ஆனாரேமழலை உருவிலே நம் மன்னன் வந்தாரே -அன்னைகன்னிமரி மைந்தன் ஆனாரே(2)இடையர்களும் பாலகனை கண்டு களிக்கின்றார்வேந்தர் மூவர் வான்மலரை வணங்கி மகிழ்கின்றார்வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்மனிதன் வாழவே ஆதி சாபம் நீங்கவே- ஏழைஅடிமைக் கோலம் பூண்டு வந்தாரேதந்தை திருவுளம் ஏற்று தம்மைத் தாழ்த்தியே- இந்ததரணி மீது மழலை ஆனாரே(2)மாந்தரெல்லாம் வாழ்வு பெற மீட்பர் பிறந்துள்ளார்மனித நேயம் மலர்ந்திடவே மன்னன் பிறந்துள்ளார்வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்
கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமேகண்ணே மணியே அமுதமே எம்பொன்னே தேனே இன்பமேஎண்ண வேவும் வண்ணமேஎன்னைத் தேடி வந்ததே! கன்னிஎங்கும் நிறைந்த இறைவன் நீநங்கை உதரம் ஒடுங்கினாய்ஞாலம் காக்கும் நாதன் நீசீலக் கரத்தில் அடங்கினாய்தாய் உன் பிள்ளை அல்லவாசேயாய் மாறும் விந்தையேவல்ல தேவன் வார்த்தை நீவாயில்லாத சிசுவானாய்ஆற்றல் அனைத்தின் ஊற்று நீஅன்னைத் துணையை நாடினாய்இன்ப வாழ்வின் மையம் நீதுன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்?
வார்த்தை மனுவுருவானார்நம்மிடையே குடிகொண்டார்கீதங்கள் இசைக்கட்டும் ஆ.....நாதங்கள் முழங்கட்டும் ஆ....நேசங்கள் மலரட்டும்இன்று பிறந்த நாள் வாந்த்துக்கள்இன்று மலர்ந்த நாள் மண்ணிலேஅன்பின் குழந்தை இயேசுவேஉந்தன் மழலை மொழி கேட்கவேஎந்தன் மனமும் தினம் ஏங்குதேஇன்று பிறந்த நாள் வாந்த்துக்கள்இன்று மலர்ந்த நாள் மண்ணிலேHAPPY CHRISTMAS HAPPY CHRISTMASMERRY CHEISTMAS MERRY CHRISTMASஒரு விண் தெய்வம் நம்மோடு மண் மீதிலேமழலையாய் மலர்ந்ததேஅந்த விண் வார்த்தை நம் வாழ்வில் இந்நாளிலேவியலாய் புலர்ந்ததேஇனி வேற்றுமை மறையட்டும்எங்கும் வேதனை தீரட்டும்வையம் மகிழும் வான் படை போற்றும் வானதேவன் வரவில் -நல்லஇதயம் நிறையும் உதயம் மலரும் தேவ மைந்தன் உறவில்- இன்று
ஆரிராரிரோ என் கண்ணே நீ தூங்கு- என்அன்பே ஆரமுதே கண்மணியே நீ தூங்குஅழியாத ஆன்மாவின் விருந்தாகவேஎன்னில் எழுந்தே நீ வா- உன்ஆன்மீக ராகங்கள் உயிர் வாழவேஎன்னில் இசை பாடவாகண் இமை மூட மறந்தே நான் காத்திருந்தேன்தெய்வமே செல்வமேநீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவேஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோஅழகான ஆன்மாவில் வருகின்றவர்என்னை உருவாக்கவா- நல்அணையாத தீபமாய் திகழ்கின்றவாஆன்ம ஒளி ஏற்றவாசிறு திரியாக உலகெங்கும் ஒளியேற்றுவேன்தெய்வமே செல்வமே!நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவேஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோ
ஞானம் நிறை கன்னிகையேநாதனைத் தாங்கிய ஆலயமேமாண்புயர் ஏழு தூண்களுமாய்(2)பலிப்பீடமுமாய் அலங்கரித்தாயே(2)பாவ நிழலே அணுகாபாதுகாத்தான் உனையே பரமன்தாய் உதரம் நீ தரித்திடவே(2)தனதோர் அமலன் தனமெனக் கொண்டார்(2)வாழ்வோர் அனைவரின் தாயேவானுலகை அடையும் வழியேமக்கள் இஸ்ராயேல் தாரகையே(2)வானோர் துதிக்கும் இறைவியே வாழி(2)
தாரகை சூடும் மாமரியேதாளினைப் பணிந்தோம் காத்திடுவாய்தாரகை சூடும் மாமரியேதேவனை உலகுக்கு அளித்தவளேதேடிய துணையைக் கொடுப்பவனே(2)வாடிய மகவை அணைப்பவளே-2வாழிய ஞானிய காவலியேதென்னக கன்னிக் கடலலையும்பன்னெழில் இமய மாமலையும்மின்னெழில் எம் தாயகமும்-3
தாவீதின் குல மலரே- ஒளிதாங்கிடும் அகல் விளக்கே- என்னைக்காத்திடும் ஆரணங்கே- அருள்சுரந்திடும் தேன் சுனையேஇறைவனே முதலில் உனைத் தெரிந்தார்கறை சிறிதில்லாக் காத்திருந்தார்மறையவர் புகழும் மாமணியேகரை சேர்ப்பதுவே உன் பணியே- தாவீதின்மக்களின் மனமே மகிழ்ந்திடவேநற்கனி சுதனை எமக்களித்தாய்கற்றவர் மற்றவர் யாவருமேபொற்பதம் சேர்த்திட வேண்டுமம்மா- தாவீதின்
கலங்கரை தீபமேகலங்களின் தாரகையேதுலங்கிடும் மணியேகலங்குவோர்க் கதியேகாத்திடுவாய் தாயேமாதர்களின் மாதிரியேமாயிருளில் ஒளி தாரகையேமாதரசியே மனவொளி தாராய்மாசு அகலச் செய்வாய்தாயெனவே தாவி வந்தோம்சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடிகூவிடும் குரல் கேளாய்
உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மாஉலகாளும் தாயே அருள் தாருமம்மா-2முடமான மகனை நடமாட வைத்தாய்கடல் மீது தவித்த கப்பலை காத்தாய்-2பால் கொண்ட கலசம் பொங்கிட செய்தாய்பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்ததாய்(2)- உம்மைகடல் நீரும் போல உன் கோயில் காணஅலையாக வந்து உன் பாதம் சேரும்-2உலகாளும் தாயே உனை பாடி வேளைநகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா(2)- உம்மைமலடான மங்கை மடிமீது மகனைமகிழ்ந்தாடச் செய்த மகிமையின் தாயே-2குருடானேன் உன்னை கரங்கூப்பி நின்றால்அருளாகி எனக்கு ஒளி தாரும் தாயே(2)- உம்மை
ஆரோக்கிய மாதாவே- உமதுபுகழ் பாடி மகிழ்ந்திடுவோம்எந்நாளும் பாடித் துதித்திடுவோம்அலைகள் மோதிடும் கடற்கரை தனிலேவசித்திட ஆசை வைத்தாயேபலவித கலைகளும் பாரினில் சிறந்திடஅனைவருக்கும் துணை புரிந்தாயே-2தேன் கமழும் சோலை தேர்ந்து விளங்கும்வேளாங்கன்னியில் அமர்ந்தாயேவானகமும் இந்த வையகமும்அருள் ஓங்கிட எங்கும் நிறைந்தாயே-2
அன்னைக்கு கரம் குவிப்போம்- அவள்அன்பைப் பாடிடுவோம் -அவள்அன்பைப் பாடிடுவோம்கன்னிமையில் இறைவன் உருகொடுத்தார் -அந்தமுன்னவனின் அன்னை எனத் திகழ்ந்தாள்மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தாள்-2தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்பாவமதால் மனிதன் அருளிழந்தான்- அன்றுபாசமதால் அன்னை கருணை கொண்டார்பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார்-2பாரினில் அவர் புகழ் பாடிடுவோம்
அழகின் முழுமையே தாயேஅலகையின் தலை மிதித்தாயேஉலகினில் ஒளி ஏற்றிடவேஅமலனை எனக்களித்தாயேஇருளை சூழ்ந்திடும் போதேஉதயத் தாரகை போலஅருளேநிறைந்த மாமரியேஅருள் வழி காட்டிடுவாயேஅன்பும் அறமும் செய்வோம்அன்னை உனை பின் செல்வோம்உன்னைத் துணையாய் கொள்வோம்என்றும் பாவத்தை வெல்வோம்
அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரிஎன்றும் உந்தன் புகழைப் பாடுவோம்தேடும் மாந்தரை தேற்றிக் காத்திடும்உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம்எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீஎங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய்-2நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்சகாயத் தாய் மரியே எம்மைஅரவணைத்திக் காப்பாய் நீயேஅண்ணல் இயேசு அன்பின் வழியைக் கற்றுத் தந்த உன்அன்பு மிகு ஆதரவில் அச்சம் நீங்குதே-2நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்சகாயத் தாய் மரியே எம்மைஅரவணைத்திக் காப்பாய் நீயே
அம்மா எங்கள் தாயே உனைப் பாடாத நாவில்லையேஅருகே நீயும் வரவே உனைத் தேடாத நாளில்லையேஅந்த மேலோக மண்ணிலா தாயாக என்னிலா பூலோகம் வந்த வெண்ணிலாஎன்னைத் தேடி அம்மாஏழையின் கண்ணீர் இங்கு கரைந்தோடுதேகான மழை நெஞ்சில் பொங்கி வழிந்தோடுதேஏந்தி வந்த சுமையெல்லாம் கனவாகுதேசுகராகம் பாட எங்கள் மனம் தேடுதேமரியே உன்னை அடைந்தோம் நெஞ்சம் நிறைந்தோம் அன்பிலே- அம்மாகோடான கோடி மக்கள் குறை தீரவேதினந்தோறும் தேடி வரும் தாய் நீயல்லோகூடிவந்து திருப்பாதம் சரணாவதால்ஆனந்த கானமிங்கு அலைபாயுதேமலரே மலரும் நிலவே உள்ளம் மகிழ்ந்தோம் உன்னிலே- அம்மா
அலையொளிர் அருணனைஅணிந்திடுமா மணிமுடி மாமரி நீவாழ்க்கையின் பேரரசிவழுவில்லா மாதரசிகலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோகாலமும் காத்திடுவாய்அகால வேளையிலே அம்மா உன் கருணையாலேபொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிடவல்ல உன் மகனிடம் கேள்
நெஞ்சில் சுரக்கும் நன்று சுரங்கள்நானிலமெங்கும் நான் பாடநந்தவனத்தில் உண்டு களிக்கும்வண்டுகள் பாடும் பண் போலவிண்ணில் தெறித்தும் மின்னல்களாய்மண்ணில் முளைத்திடும் நல் விதைகள்மின்னித்தெறித்திடும் மின்னல்களாய்கண்ணில் தெரிந்திடும் நம்பிக்கைகள்நன்மையைக் கண்டேன் நல்லெண்ணம் கொண்டேன்நானிலமெங்கும் உன் புகழ் சொல்வேன்தோளழுத்தும் நுகத்தடியின் விலங்குகளை உடைக்கதோழமையில் பூமியிலே புதுவுலகம் படைக்கநெஞ்சுக்குள்ளே புரட்சிக் கனலை யார் வைத்ததுஅஞ்சாத நெஞ்சமும் அணையாத எண்ணமும் எல்லாமே நீ தந்தது-2எல்லையில்லா உலகிலே எனக்கு உயிர் தந்தாய்எத்தனையோ மனிதர்களை உறவெனவே தந்தாய்ஈரமுள்ள உறவுகளை யார் தந்ததுஇறையரசின் நினைவுகளும் யார் தந்ததுபுதுயுகத்தின் கனவுகள் புன்னகைக்கும் உறவுகள்எல்லாமே நீ தந்தத-2
காற்றே முகிலே பாடுங்களேஇயேசுவின் புகழை போற்றுங்களே-2உண்மையின் ஒளியிது அன்பெனும் சரமிதுபாசத் தோட்டத்தின் பூவே- மனமே மகிழ்வே-2சுயநல வாழ்வில் அமைதியுண்டோமன்னிப்பின் மகிழ்ச்சிக்கு ஈடேதும் உண்டோ(2)வாழ்வை செபமாய் மாற்றிடபாசப் பாடம் பயின்றிட(2)இனிய உதயங்கள் இனியெங்கும் எழுந்திடஅமைதிப் புறாவே சொல்லித்தா(2)இயற்கையின் மேமைக்கு ஈடேதும் உண்டோஅன்பிற்க்குள் ஆணவம் ஜெயித்ததுண்டோ(2)வறுமையில் வளமை கண்டிடவரங்கள் ஆயிரம் பொழிந்திட(2)அற்புத நாயகா ஆனந்த கீர்த்தனாஏழ்மையின் காதலா எழுந்து வா
காலம் போற்றும் கருணை தெய்வமே உன் தயவினால்ஞானம் தாரும் உன்னைப் பாடவேவான் கூறும் வண்ணக் கவிதைபூமி சிந்தும் புன்னகை கீதம்அத்தனையும் சொல்வதுன் புகழல்லவாநீ தந்த வாழ்வைப் பெற்றுவாழ்கின்ற உயிரினங்கள்அனைத்திலும் இருப்பது நீயல்லவாகண்ணின் மணி போல் காக்கும் தெய்வமேஉன் புகழ் பாட ஞானம் தாருமேபணி வாழ்வில் பண் பாடும் துருத்தூதனாய்எனை ஏற்றிட திருவடிகளில் சரணாகின்றேன்உன் கனவை நெஞ்சில் தாங்கிஎன் ஜீவன் வாழும் போதுஉலகினர் காண்பதுன் அருளல்லவாநான் உன்னில் இணைய வேண்டும்நீ என்னில் நிறைய வேண்டும்உணர்வோடு கலப்பது அழகல்லவாதாய் தந்தை யாவும் இறைவனேஎன் பெயரை உந்தன் கையில் தாங்குமேநீ தந்த புவி வாழ்வில் துருத்தூதனாய்எனை ஏற்றிட திருவடிகளில் சரணாகின்றேன்
ஒளியாய் மழையாய் நீ பொழிந்தால்வளர்வேன் செழித்தெ உயர்ந்திடுவேன்(2)கனிவாய் பரிவாய் நீ அணைத்தால்இனிதாய் புதிதாய் மலர்ந்திடுவேன்இறைவா முதல்வா வழிகாட்டு- என்இதயம் உன் இல்லம் விளக்கேற்று -ஒளியாய்துணையாய் அருகே நீ வந்தால் எந்தத்தொலைவும் எளிதாய் கடந்திடுவேன்(2)சுனையென அன்பு சுரந்து வந்தால்- நான்சுகமாய் மகிழ்வாய் நடந்திடுவேன்- இறைவாஆற்றலும் அருளும் நீ தந்தால்ஓராயிரம் பணிகள் ஆற்றிடுவேன்(2)தேற்றிட நீயும் அருகிருந்தால்- எந்தத்துயரச் சுமையும் தாங்கிடுவேன்- இறைவா
ஒரு போதும் உனைப் பிரியாநிலையான உறவொன்று வேண்டும்என் உடல் கூட எரிந்தாலும்உன் நாமம் நான் சொல்ல வேண்டும்நினைவிலும் நீயே என் கனவிலும் நீயேநீங்காத நினைவாக வா இறைவாஉன் கையில் என்னை நீ பொறித்தாய்பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய்ஏன் என்னை நீ தெரிந்தாய்என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் தாய்உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன்உன்னோ நான் வாழுவேன்நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன்என்னுள்ளே வாழும் தெய்வம்என்னை நீ ஆளும் தெய்வம்என் இயேசுவே என்னுள்ளம் நின்றாய் நிதம்என் பாதை முன்னே நீதானே சென்றாய்உன்னோடு நான் வாழுவேன்
எந்தன் இதய இனிய வேந்தன்என்னில் வந்து தங்கும் நேரம்வந்ததும் வசந்தம் வீசுமேவசந்தத்தில் வாழ்வுண்டு வாழ்வில் அவனுண்டுஎன்னில் அவனும் அவனில் நானும் என்றும் ஒன்றுதானேவாழ்க்கை மூச்சு நின்றுவிடும் அன்றேவீசிடும் காற்று நீ எனில் இல்லை என்றால்ஓடோடி வந்தேன் உனை என்னில் ஏற்கஒன்றாகும் நேரம் நான் உன்னைப் பாடஆ..ஆ..ஆ..ஆ.. அன்பு தெய்வமே அருள் தாருமேநீ மீட்டும் வீணையும் நான் பாடும் பாடலும்இறைகடலில் சங்கமிக்கும் இதய வேந்தனேநிம்மதி நீயாய் இருக்கின்ற போதுநிதமும் நீ என்னில் தங்கிட வேண்டும்சிந்தனைகள் யாவும் சீர்படுத்த வேண்டும்சொல் செயல் யாவும் தூய்மையாக வேண்டும்ஆ..ஆ..ஆ..ஆ..அன்பு தெய்வமே அருள் தாருமேஎன் வறுமை எனும் இருள் உன் வளமை ஒளியிலேஅகன்றிட வேண்டும் என் அன்பு தெய்வமே
என் மன்னவா என்னில் இறங்கி வா(2)தினமும் எந்தன் உணவாய் என்றும்என்னில் மகிழ வாஆன்ம ஜோதியே என்றும்என்னில் மகிழ வாபாட்டிசைத்து பாட வந்தேன்உந்தன் மனம் மகிழுதேகாலமெல்லாம் காத்திருந்தேன்உந்தன் சொந்தம் தேடுதேஎன் உயிரே என் உறவேஎந்தன் உள்ளம் எழுந்து வாஆ....ஆ.... என் உயிரேதினம் தினம் என்னில் வாஎன்னில் வாழ வாஉயிரில் கலந்து வா -என் மன்னவாநெஞ்சமெனும் கோவிலிலேதெய்வமாய் எழுந்து வாதஞ்சமென்று ஓடி வந்தேன்நலம் தந்து அணைக்க வாஅன்புருவே ஆரமுதேஅன்பர் எம்மில் எழுந்து வாஆ....ஆ... அன்புருவேதினம் தினம் என்னில் வாஎன்னில் வாழ வாஉயிரில் கலந்து வா- என் மன்னவா
எந்தன் தேவா என்னில் வாரும்உந்தன் அன்பை என்னில் தாரும்எந்தன் நாவு உன் நினைவாகஎன்றும் உம்மை எண்ணிப் பாடும்- எந்தன்இறை இயேசுவின் திவ்யப் பிரசன்னம்எந்தன் இல்லத்தில் இன்று தங்கும்புவி மீதினில் நீதியை அருளஎந்தன் ஆண்டவர் விரைவாய் வருவார்வான வீதியில் மின்னல் தோற்றம் போல்ராஜா வருவாரே மனமே காத்திருநீர் என்னில் வந்ததால் நான் உம்மில் தான்- எந்தன்
என் இதயம் உன் ஆலயமேஎன்னில் குடிகொள்ள வா ஓ தேவாஎன்னில் உயிரூட்டவாசரணம் தேவா சரணம் தேவா......(4)பாவம் அகற்றி உன் குடிலாக என்னை மாற்றும் ஐயாஉன் உருவம் என் இதயத்திலேநிரந்தரம் பதிக்குமையா ஓ தேவா.....(2)நீருக்காக ஏங்கும் என் நிலத்தைப் பாருமையாவாழ்வுதரும் உன் நீரளித்து வாழ்வினைசெழிக்க வைப்பீர்- ஓ தேவா.....(2)
உறவாடும் நேரமிது உனைக் காணும் காலமிதுஎன் இயேசுவே நாளுமேஇதயம் வாருமேமலராகினாலும் சருகாகினாலும்எனையே உனதாக்கினாய்மலையாகினாலும் மடுவாகினாலும்நிலவே எனை நோக்கினாய்அரணாய் என்னை நீ சூழ்ந்து நின்றாய்தாயின் கருவில் எனைத் தேர்ந்த தெய்வம்உன்னில் மகிழ்கின்றேன்பதராக என்னை ஊர் பார்க்கும்போதுபயிராக நீ மாற்றினாய்பகையோடு என்னைப் பிரிந்தாளும் போதுஅன்பே எனை நோக்கினாய்துரும்பான என்னை விரும்பினேன் என்றாய்என் வாழ்வின் பொருளாய் நீயாகும்போதுஎதையும் தாங்குவேன்
உணவாக எழும் தெய்வமேஉறவாட எனில் வாருமேதனைத் தந்த தெய்வம்எனை ஆள வந்தால்தனிமைகள் பறந்தோடுமேதனியின்பம் எனை சூழுமே ஓ....பிரிந்ததால் வீழ்ந்திட்ட மானிடத்தைஇணைத்திட தோன்றிய தேனமுதேபகைமையால் வளர்ந்திட்ட பிளவுகளைபோக்கிட மலர்ந்திட்ட வான் கவியேதிருவுணவும் திருப்பானமும்உனதுறவை எடுத்துச்சொல்லும்(2)ஒரு பந்தி சம பந்தி எந்நாளும் மலரச் செய்யும் ஆ.....காலமெல்லாம் திருவுணவில் தனை வழங்கும்கரையில்லா உனதன்பை நான் மறவேன்கலங்கிடும் வேளையில் கை விடாமல்கரம்பிடிக்கும் என் தேவா உனைப்பிரியேன்காத்திருக்கும் கண்களுக்குகாட்சியாக நீ வருவாய்(2)கனிவுடனே தங்கிடுவாய்ஏழை என் நெஞ்சினிலே
இறைவனின் உடலிதுஅவரது இரத்தமிதுஅவர் நினைவாய் நாம் செய்யும்மீட்பின் சின்னமிது- நம்வாழ்வின் உணவிதுஅப்பத்தை உண்டு கிண்ணத்தைப் பருகும் வேளைகள் எல்லாம் விசுவாசமேஆண்டவர் வருகின்ற நாள்வரை நாமும்மரணத்தின் அறிக்கை செய்வோமேஆதலினால் தகுதியுடன்அப்பத்தை உண்டிடுவோம்- நாம்கிண்ணத்தைப் பருகிடுவோம்பிளவுகள் அகற்றி பிரிவினை மறந்துவிருந்தினை ஒன்றாய்க் கூடிடுவோம்உறவினை வளர்க்க உள்ளத்தைப் பகிர்ந்துவிருந்தினை உலகினில் படைத்திடுவோம்தினந்தோறும் திருவிருந்தில்இறைவனில் கலந்திடுவோம்- இறைநிழலாய் வாழ்ந்திடுவோம்
அன்பு தேவன் சொன்ன வாக்குஅழிவு காண்பதில்லை என்றுவாழும் மாந்தர் காணும் பாதைபுதிய உலகம் சேருமேதன்னைத் தந்த தலைவன் அவரைஉறவு வாழ்வில் சுவைத்து மகிழ்ந்தால்நெஞ்ச நிறைவு தந்து தேற்றும்இனிய அமைதி தோன்றுமேகண்டுகொண்டோம் இயேசுவே உம்மையேகாலமெல்லாம் காக்கும் உந்தன் அருளையே- அன்புதேவன்திராட்சைக்கொடி நானே என்று தன்னை அளித்தார்நீங்கள் அதன் கிளைகள் என்று நம்மை அழைத்தார்நல்லமேய்ப்பன் நானே என்று தன்னையே தந்தார்நீங்கள் என் மந்தை என்று நம்மை இணைத்தார்நண்பனுக்காய் உயிர்தருதல் மேலான அன்புஅன்புக்கு இலக்கணமே இயேசுவேஉறவின் பாலம் இயேசுவே உதய கீதம் இயேசுவேஎல்லார்க்கும் எல்லாமே இயேசுவே -அன்புதேவன்வானில் உணவு நானே என்று தன்னைத் தந்தாரேஎன் நினைவில் வாழ்க என்று நம்மை அழைத்தார்உலகின் ஒளி நானே என்று தீபம் ஆனாரேதீப ஒளியை நாடு என்று நம்மைப் பணித்தார்உலகத்தின் இறுதி வரை உன்னோடி வாழ்வேன்வாழ்வுக்கு ஆதாயம் இயேசுவேதியாக தீபம் இயேசுவே வாழ்வின் உணவு இயேசுவேஎல்லார்க்கும் எல்லாமே இயேசுவே- அன்புதேவன்
அதிசங்கள் செய்கிறவர் நம்அருகில் இருக்கிறார்அற்புதங்கள் செய்கிறவர் என்றும்நமக்குள் வசிக்கிறார்தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம்(2)வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய்மாற்றினார் அதிசயம்செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2)புயல் காற்றைத் தம் ஆணையாலேஅடக்கினார் அதிசயம்குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2)ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்
அன்பனே விரைவில் வா- உன்அடியேனைத் தேற்றவாஅன்பனே விரைவில் வாபாவச்சுமையால் பதறுகிறேன்பாதை அறியாது வருந்துகிறேன்பாதை காட்டிடும் உன்னையே நான்பாதம் பணிந்து வேண்டுகிறேன்இருளே வாழ்வில் பார்க்கின்றேன்இதயம் நொந்து அழுகின்றேன்ஒளியாய் விளங்கும் உன்னையே நான்வழியாய் ஏற்று கொள்ளுகிறேன்
வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன்என்னையே ஏற்றிடுவாய்முழுமனதுடனே கையளிக்கின்றேன்காணிக்கை ஏற்றிடுவாய்கோதுமை மணியும் திராட்சை கனியும்புது உரு பெறுவது போல்(2)அன்பும் அமைதியும் நீதியுமேமனிதனில் மலர்ந்திட உயிர் தருவோம்நான் வாழப் பிறரும் பிறர் வாழ நானும்தேவை என்றுணர்ந்தேன்(2)சமத்துவ சகோதர நோக்குடனேபுது யுகம் காண்போம் அகத்தினிலே
பொன்னும் பொருளிமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லைஉன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்(2)சொந்தம் பந்தமுமெல்லாம் நீயேயெனச் சொல்லிவந்தேன்எந்தையும் என் தாயும் நீயன்றோ நீயோஎன்னை ஆளும் மன்னவனன்றோநிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ- என்நிம்மதி இழந்து நின்றேன்வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான்அளவில்லா பாவம் செய்தேன்தனது இன்னுயிரை பலியெனத் தந்தவரேஉனக்கு நான் எதையளிப்பேன்- இன்றுஉனக்கு நான் எனையளித்தேன்வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்ஒழிந்திட உழைத்திடுவேன்அமைதியும் நீதியும் அன்பும் அறமும்நிலைத்திட பணி செய்வேன்தனது இன்னுயிரை பலியெனத் தந்தவரேஉனக்கு நான் எதையளிப்பேன் இன்றுஉனக்கு நான் எனையளித்தேன்
பலியென எனைத் தருவேன்- உம்பலியினில் எனை இணைத்தேன்பகிர்தலில் நாளும் வளரபணிந்தே எனைத் தருவேன்வாழ்வது நானல்ல எந்தன் இயேசுவே வாழ்கின்றீர்எந்தன் உடல் பொருள் ஆவி எல்லாம்உமக்கே தருகின்றேன்-2என்னையே ஏற்று வாழஉமதருள் கேட்கின்றேன்-2திராட்சை கொடி என்றீர்-அதன்கிளைகள் நீர் என்றீர்எனக்குள் இருப்போரெல்லாம்என்றுமே வாழ்வாரென்றீர்-2பிறரையே ஏற்று வாழஉம் வரம் கேட்கின்றேன்-2
தருகின்ற நேரம் எம்மைத்தருகின்ற நேரம்காணிக்கையாக உம்மில் நாங்கள்இணைகின்ற நேரம்(2)உயிரும் உடலும் உறவும் உணர்வும்வாழ்வும் வளமும் வசந்தத்தின் நிறைவும்(2)உந்தன் பெருங்கொடையே- நீஎமக்காய் தந்தவையேஉந்தன் படைப்புக்களே- நீர்எமக்காய் தந்தவையேஇன்று உம்மில் இணைய வருகின்றோம்உமக்காய் எம்மைத் தருகின்றோம்- தருகின்ற
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லைதந்தேன் என்னையே அன்புடனேசரணடைந்தேனே சரணடைந்தேனேஆவியே உம்மிடம் சரணடைந்தேன்(2)தருவதில் பெறுவோம் விண்ணக வாழ்வைதந்தேன் என்னையே அன்புடனே(2)சரணடைந்தேனே சரணடைந்தேனேஆவியே உம்மிடம் சரணடைந்தேன்-2அப்பமும் ரசமும் தருவதின் வழியேதந்தேன் என்னையே அன்புடனே(2)சரணடைந்தேனே சரணடைந்தேனேஆவியே உம்மிடம் சரணடைந்தேன்-2
காணிக்கை தரும் நேரம்- நான்என் மனம் தருகின்றேன்-2ஏற்றருளும் தெய்வமேஎளியவன் தருகின்ற காணிக்கையை-2படைப்புக்கள் பலவாகினும்பரமன் உமக்கே சொந்தம் -2-அதில்மலராகும் என் மனம் உன்னிடத்திலே-2மணம் காண ஏற்றிடுமே-2பிறரன்பு பணிகளெல்லாம்தலைவன் உமதன்றோ-2- என்றும்உமதன்புப் பலியினில் என் வாழ்வினை-2பலியாக ஏற்றிடுமே-2
காணிக்கை தந்தோம் தேவா-எம்மைகனிவோடு கரம் தாங்கி ஏற்பாய்-2எம் வாழ்விலே உம் கனவை வாழ-2அருளாகி நிறைவாக தினந்தோறும் தாரும்மனுவாக வந்தாய் மண் வாழ்விலேநலமான இறையாட்சியே-2மனித நலம் காக்க மாண்போடு வாழ-2எம் உயர்வையும் பிறர் உயர்வையும்உம் பாதம் வைத்தோம்(2)இறைவா எங்கள் தலைவாநிறைவாய் வரங்கள் தருவாய்-2நலமாக எந்நாளும் உருவாகவேநலம் காணும் நல்வாழ்விலே-2சாதி சமயம் நீங்க சம வாழ்வு ஓங்க-2எம் உணர்வையும் பிறர் உணர்வையும்உம் பாதம் வைத்தோம்-2இறைவா எங்கள் தலைவாநிறைவாய் வரங்கள் தருவாய்(2)
காணிக்கை காணிக்கைகாணிக்கையாக வருகின்றோம்ஏற்றிடுவாய் மாற்றிடுவாய்என்னையும் பலியினில் சேர்த்திடுவாய்கோதுமை மணியும் திராட்சை இரசமும்உம்மிடம் கொண்டு வந்தோம்நேரிய உழைப்பும் உழைப்பின் பயனும்உமக்கே கையளித்தோம்இன்றைய பொழுதில் செய்பவை அனைத்தும்உம்மிடம் படைக்க வந்தோம்எம் செயலனைத்தும் உம் செயலாகமாற்றிட கூடி வந்தோம் - காணிக்கை