
என்னில் வந்து தங்கும் நேரம்
வந்ததும் வசந்தம் வீசுமே
வசந்தத்தில் வாழ்வுண்டு வாழ்வில் அவனுண்டு
என்னில் அவனும் அவனில் நானும் என்றும் ஒன்றுதானே
வாழ்க்கை மூச்சு நின்றுவிடும் அன்றே
வீசிடும் காற்று நீ எனில் இல்லை என்றால்
ஓடோடி வந்தேன் உனை என்னில் ஏற்க
ஒன்றாகும் நேரம் நான் உன்னைப் பாட
ஆ..ஆ..ஆ..ஆ.. அன்பு தெய்வமே அருள் தாருமே
நீ மீட்டும் வீணையும் நான் பாடும் பாடலும்
இறைகடலில் சங்கமிக்கும் இதய வேந்தனே
நிம்மதி நீயாய் இருக்கின்ற போது
நிதமும் நீ என்னில் தங்கிட வேண்டும்
சிந்தனைகள் யாவும் சீர்படுத்த வேண்டும்
சொல் செயல் யாவும் தூய்மையாக வேண்டும்
ஆ..ஆ..ஆ..ஆ..அன்பு தெய்வமே அருள் தாருமே
என் வறுமை எனும் இருள் உன் வளமை ஒளியிலே
அகன்றிட வேண்டும் என் அன்பு தெய்வமே
No comments:
Post a Comment