
ஞானம் தாரும் உன்னைப் பாடவே
வான் கூறும் வண்ணக் கவிதை
பூமி சிந்தும் புன்னகை கீதம்
அத்தனையும் சொல்வதுன் புகழல்லவா
நீ தந்த வாழ்வைப் பெற்று
வாழ்கின்ற உயிரினங்கள்
அனைத்திலும் இருப்பது நீயல்லவா
கண்ணின் மணி போல் காக்கும் தெய்வமே
உன் புகழ் பாட ஞானம் தாருமே
பணி வாழ்வில் பண் பாடும் துருத்தூதனாய்
எனை ஏற்றிட திருவடிகளில் சரணாகின்றேன்
உன் கனவை நெஞ்சில் தாங்கி
என் ஜீவன் வாழும் போது
உலகினர் காண்பதுன் அருளல்லவா
நான் உன்னில் இணைய வேண்டும்
நீ என்னில் நிறைய வேண்டும்
உணர்வோடு கலப்பது அழகல்லவா
தாய் தந்தை யாவும் இறைவனே
என் பெயரை உந்தன் கையில் தாங்குமே
நீ தந்த புவி வாழ்வில் துருத்தூதனாய்
எனை ஏற்றிட திருவடிகளில் சரணாகின்றேன்
No comments:
Post a Comment