
இயேசுவின் புகழை போற்றுங்களே-2
உண்மையின் ஒளியிது அன்பெனும் சரமிது
பாசத் தோட்டத்தின் பூவே- மனமே மகிழ்வே-2
சுயநல வாழ்வில் அமைதியுண்டோ
மன்னிப்பின் மகிழ்ச்சிக்கு ஈடேதும் உண்டோ(2)
வாழ்வை செபமாய் மாற்றிட
பாசப் பாடம் பயின்றிட(2)
இனிய உதயங்கள் இனியெங்கும் எழுந்திட
அமைதிப் புறாவே சொல்லித்தா(2)
இயற்கையின் மேமைக்கு ஈடேதும் உண்டோ
அன்பிற்க்குள் ஆணவம் ஜெயித்ததுண்டோ(2)
வறுமையில் வளமை கண்டிட
வரங்கள் ஆயிரம் பொழிந்திட(2)
அற்புத நாயகா ஆனந்த கீர்த்தனா
ஏழ்மையின் காதலா எழுந்து வா
No comments:
Post a Comment