
உடல் பொருள் ஆவியையும்
எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே(2)
சிந்தனை சொல் செயல் அனைத்தையும் தந்தோம்
நிந்தனை யாவையும் ஏற்கவும் துணிந்தோம்(2)
எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே
அனைத்தும் உன் அதிமிகு மகிமைக்கே என்று
ஆர்வமாய் வாழ்ந்திட துணை புரிவாயே(2)
எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே
உம் அருள் ஒன்றே எனக்கென்றும் போதும்
உம் பதம் நாங்கள் சரணடைந்தோமே(2)
எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே
No comments:
Post a Comment