தெய்வம் நம்மை தேடி வருகின்றார் தினமும் உணவாய்த் தம்மையே தருகின்றார் ஒன்றாய் இணைந்து நாமும் வாழ ஓருடல் பகிர்ந்து உள்ளம் உறைந்திடுவார் -தெய்வம்
மண்ணில் விழுந்த விதையாக மடிந்தார் இயேசு உலகுக்காக தன்னை இழந்தார் வையம் வாழ தன்னலம் மறந்து நாமும் வாழ பிறர் வாழ்ந்திட கரம் கொடுப்போம் பலம் தந்து பாதையாவார்(2)- தெய்வம்
கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வம் ஒன்றாய் வாழும் மனங்கள் தேடும் அன்பால் அனைத்தும் கூடுமென்று அன்பின் சிறகால் நம்மை மூடும் மலர் மணமாய் மனம் வாழ எழும் இயேசு தேவா வந்திடுக(2)- தெய்வம்
இறைவா உன் திருமுன் ஒரு குழந்தை போல் தாவி மேலே வருகின்றேன் என் நிலை நான் சொல்கின்றேன் உன் குழந்தை நானல்லவா என்னை நோக்கி ஓடி வந்து என்னை காப்பாயோ
அன்பைத் தேடும்போது என் தந்தை நீயல்லவா அமுதம் நாடும்போது என் அன்னை நீயல்லவா(2) ஒரு குறையும் இன்றி காத்தாய் நல் அன்பை ஊட்டி வளர்த்தாய் உன்னை ஒதுக்கியே பார்த்த நானும் இனி என்ன கைமாறு செய்வேன்-2
மங்கும் வாழ்வை அகற்றி ஒளி தருபவன் நீதானய்யா மனதில் அமைதி பொங்க வழி அருள்பவன் நீதானய்யா(2) உன்னை என்றும் எண்ணி வாழ்ந்து ஒரு நாளும் பிரியாமல் வளர்ந்து உந்தன் மடியிலே தவழ்ந்து நானும் இனி அப்பா தந்தாய் என்று அழப்பேன்-2
எந்தன் ஆன்மா ஆண்டவரை ஏற்றி போற்றிடுதே இந்த அடிமை என்னை அவர் நினைந்ததனால் அந்த மீட்பரில் நெஞ்சம் மகிழ்கின்றதே
வல்லவர் எனக்காய் பெரியன புரிந்தார் வையகம் எனை தினம் வாழ்த்திடுமே அருள் நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் பெரும் பேறுபெற்றீர் வாழ்க மரியே வாழ்க அவர் தம் பதம் பணிவோர் தலைமுறைக்கெல்லாம் தயவருள்வார் அவர் தூயவராம்-2
அவர் தமதாற்றல் கரத்தினை நீட்டி செறுக்கடைந்தோரை சிறகடித்தார்(2)- அவர் வலியோரை உயர் இருக்கையின்றிறக்கி எளியோரை மிக உயர்த்தி விட்டார் பசித்தோரை பல நலன் கொண்டு நிரப்பி செல்வரை வெறுங்கையறென விடுத்தார்-2
வங்கக் கடலோரம் உந்தன் தலம் தேடி வந்தாரை நலமாக்கும் அன்பே ஆரோக்கியத் தாயே அம்மா
வேலை கிடைக்கும் என்று வேளைநகர் வந்து வெருங்கையாய் சென்றாருண்டோ நல்ல எந்தன் வேளை இன்றும் வரவில்லை என்று சொன்ன இயேசு அன்று உன் சொல்லில் இசைந்தாரன்றோ உன் சொல்லில் வரம் வேண்டி வந்தோம்
காவல் கரங்கள் நீட்டி கருணை சிரம் காட்டி கலங்காதே என்றாய் தாயே உந்தன் அன்பை வேண்டி வந்து அல்லல் சேர்ந்த எந்தன் வாழ்வில் துதிப்பாடி உனைப் போற்றினோம் தூயோனின் தூயான மாமரியே வாழ்க
தேடும் அன்பு தெய்வம் எனை தேடி வந்த நேரம் கோடி நன்மை கூடும் புவி வாழும் நிலைகள் மாறும்-2
இந்த வான தேவன் தந்த வாழ்வுப் பாதை எந்தன் வாழும் காலம் போகும்(2)
வார்த்தையாகி நின்ற இறைவன் இந்த வாழ்வைத் தேர்ந்த தலைவன் பாரில் எங்கும் புதுப்பாதை தந்து அந்த பாதையில் அழைத்த அறிஞன் காலம் கடந்த கலைஞன் என் தலைவன்- இந்த
அடிமை அழைப்பு இங்கு ஒழிய எங்கும் மனித மாண்பு நிறைய புரட்சி குரல் கொடுத்து அறிய வழி வகுத்து புதுமை செய்த பெரும் புனிதன் வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன்- இந்த
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட இயேசுவே ஏழை எந்தன் நெஞ்சதனில் வா உந்தன் அன்பிலே மகிழ்ந்திருப்பேன் என்னை உந்தன் சொந்தமாக்க வா
பாவி என்னைத் தேடி வந்த இயேசுவே பாவக் கறைதனை என்னில் நீக்க வா பாசம் பொங்கும் நெஞ்சம் கொண்ட இயேசுவே இந்த பாவிதனை ஏற்றுக்கொள்ள வா நித்தம் நித்தம் உன்னையே வணங்கிடுவேன் உந்தன் சித்தப்படி என்னை மாற்றவா
உயிர்தரும் உணவான இயேசுவே எந்தன் உள்ளத்திற்கு உயிர் தரவா விண்ணகத்தின் வழியான இயேசுவே என்னை உன்னகத்து கொண்டு செல்லவா உன்னை எண்ணியே வாழ்ந்திருப்பேன் என்னை இனி மறந்திருப்பேன்
என்னில் ஒன்றாக எந்தன் நல் தேவன் எழுந்து வருகின்றார் எண்ணிலா அருளை அன்புடனே தலைவன் தருகின்றார்
உதயம் காண விளையுமோர் மலரைப் போலவே இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதே பகலை மறைக்கும் முகிலாய் பல பழிகள் சூழ்ந்ததே அந்த முகிலும் இருளும் குறையும் தீரமுழுமை தோன்றுமே
என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன் என்றும் பகர்ந்த இறைவா என்னை இணைக்க வாருமே உந்தன் அன்பு விருந்தை நாளும் அருந்திஅமைதி காணுவேன்
எல்லாம் உன் அருளே இறைவா எல்லாம் உன் கொடையே நான் இருப்பதும் என் இயக்கமும் நான் மலர்வதும் உன்னில் மறைவதும் நான் பெற்றுக்கொள்ளாததில்லை இங்கு நீயின்றி நானேதுமில்லைஎன் தேவனே எல்லாம் நீர் தந்தது உன் தேவை நிறைவேற சரணாகதி...எல்லாம்
இந்த பூமியில் நான் வாழ்வதும் உடலும் உள்ளமும் நலமாவதும சொந்த உறவுகள் நான் காண்பதும் பாசங்களில் நான் மகிழ்வதும் அருளாலே நான் பெற்ற வாய்ப்பு உன் அன்பாலே நான் பெற்ற அமைப்பு என் தேவனே எல்லாம் நீர் தந்தது உன் தேவை நிறைவேற சரணாகதி
என்னைத் தேர்ந்ததும் என்னில் சேர்ந்ததும் எங்கெங்கும் நான் காணும் எழில்களும் என் திறமைகள் என் உரிமைகள் நீதியில் நான் கொண்ட காதலும் உன்னோடு நான் கொள்ளும் உறவும் இவ்வுலகோடு நான் கொள்ளும் பரிவும் என் தேவனே எல்லாம் நீர் தந்தது உன் தேவை நிறைவேற சரணாகதி
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன் என்னையே உனக்காக தருகின்றேன்-2 மலைகளில் விழுந்து மனமென நுழைந்து காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து.....இறைவா
பசி உள்ளோர்க்கு உணவாக நான் இருப்பேன் உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன்-2 விழுந்தவரை தூக்கிடுவேன்- இங்கு நலிந்தவரின் துணையிருப்பேன்- இதுவே நான் தரும் காணிக்கையே இறைவா
என்னுயிர் தெய்வம் இயேசுவே என்னில் வருவீர் வாழ்விக்கும் தெய்வம் வழித்துணையாகிடுவீர் நீயாக நான் மாற வேண்டும் எந்நாளும் அன்பாலே ஆட்கொள்ள வேண்டும்வாழும் தெய்வமே
வாழ்வு தரும் உணவாக என்னில் வருவாயே வழிகாட்டும் ஒளியாக என்னில் எழுவாய்-2 தேவனே ஜீவனே என் உயிரில் கலந்திட வா-2 தினமும் உன்னில் இணைந்து மகிழ்வேன் அன்பே உன்னை நினைந்து உருகி ஆனந்தம் கண்டிடுவேன்-2
தேடுகின்ற ஆயனாக என்னைத் தேடியே தேற்றுகின்ற தாயாக என்னைத் தாங்குவாய்-2 அன்பனே நண்பனே என் உள்ளம் நிறந்திடவா-2 வாழ்வில் என்றும் வளமே காண அருளின் செல்வம் அன்பின் தெய்வம் என் மனம் எழுந்திடுவாய்-2
நானே வானின்று வந்த உணவு என்னை உண்பவன் என்றுமே வாழ்வான் என்று சொன்ன இயேசுவே
உணவாக வா என் துணையாகவா என் மன வானிலே என் சொந்தமாகவா-2
தீராத தாகத்தில் தவிக்கின்ற நெஞ்சம் தினம் தினம் போராடி சோர்வுற்று அஞ்சும் தாகம் கொண்டோர்களை சுமை சுமந்தோர்களை-2- அன்பால் கைதூக்கி களைப்பாற்றும் என் இயேசுவே-2
வாழ்வுக்கும் உணவாக நீ வந்த நேரம் நோய் தீர்க்கும் மருந்தாக தினம் என்னை காரும் உள்ளம்உடைந்தோர்களை மாண்பு இழந்தோர்களை-2- உந்தன் பாசத்தால் அணைக்கின்ற என் இயேசுவ-2
என்னைத் தந்திட எழுந்து வருகிறேன் எல்லாம் தந்த உந்தன் அருளோடு வாழவே-2
மாறிட மறுக்கும் என் மனதினை தருகிறேன் மாற்றம் வேண்டியே என்னைப் படைக்கிறேன்-2 இழந்து நான் பலியாகி இறை உன்னை தந்திடவே ஏற்றிடு மாற்றிடு எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு
பகைமை வளைக்கும் என் உணர்வினை தருகிறேன் பாசம் வளர்த்திட உன் உறவினை கேட்கிறேன்-2 உறவின் கரமாகி உனதருளை கண்டிடவே ஏற்றிடு மாற்றிடு எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு
குறையாத அன்பு கடல் போல வந்து நிறைவாக என்னில் அலை மோதுதே அந்த அலைமீது இயேசு அசைந்தாடி வரவே பலகோடி கீதம் உருவாகுதே-2
கண்மூடி இரவில் நான் தூங்கும்போது கண்ணாக இயேசு எனைக் காக்கின்றார்(2)- உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி மண் மீது வழ வழி செய்கின்றாய் ஆ...ஆ.... நான் மண்மீது வாழ வழி செய்கின்றாய்
அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும் தொடர்கின்ற இரவில் முடிவாகுமே(2)- மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர் துடைக்கின்ற இயேசு அரசாகுமே ஆ...ஆ... கண்ணீர் துடைக்கின்ற இயேசு அரசாகுமே
நெஞ்சதில் வா என் தெய்வமே நீயாக நான் மாறவே உன்னை நான் கண்டு உன் பாதை சென்று நீயாக நான் வாழவே-2
என் உள்ளம் நீ வந்து அமர்கின்ற நேரம் என் கண்கள் புதுப் பர்வை காணும்-2 என்னில் நீ ஒன்றான நிலையான உறவில் புது வாழ்வு எனை வந்து சேரும் எனில் வாழ்வது இனி நீயல்லவா-2 உன் வாழ்வு எந்தன் வழி அல்லவா
உன்னோடு கைகோர்த்து நான் செல்லும் பாதை ஒரு போதும் தவறாவதில்லை-2 என்னோடு நீ வாழும் சுகமான நினைவில் எதைக் கண்டும் நான் அஞ்சவில்லை என் நெஞ்சமே இனி உன் இல்லமே-2 என்னோடு உடன்வாழ வா தெய்வமே
ஏழிசை நாதனே எழுவாய் இறை அருளை என்னில் நீ பொழிவாய் பலவரங்கள் தந்து எனைக் காப்பாய் வழி காட்ட எழுந்து வருவாய்
வாழ்வும் வழியும் நீ எனக்கு வளங்கள் சேர்க்கும் அருமருந்து-2 உறவை வளர்க்கும் விருந்து -2- என்னில் நிறைவை அளிக்கும் அருளமுது பாடுவேன் பாடுவேன் பல சிந்து பாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2
விழியும் ஒளியும் நீ எனக்கு விடியல் காட்டும் ஒளிவிளக்கு-2 மனிதம் வாழும் தெய்வம்-2- என்னில் புனிதம் வளர்க்கும் நல் இதயம் பாடுவேன் பாடுவேன் பல சிந்து பாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் நான் வாழ்ந்த பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் நிரந்தரம் ....நிரந்தரம்.....நீயே நிரந்தரம்(2)
தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்(2) நிரந்தரம்...நிரந்தரம்.....நீயே நிரந்தரம்...(2)
செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நினைவாழ்வு என்றும் நிஜமாவதில்லை நிரந்தரம் அதன் விலையாக என்னை உன்னில் இணைப்பாய் நிரந்தரம்(2) நிரந்தரம்....நிரந்தரம்.....நீயே நிரந்தரம்.....(2)
உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவை காப்பதா இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார் அவரே புனித சவேரியார்- உலகமெல்லாம்
பொன்னும் பொருளும் தேடுகிறோம் பட்டம் பதவியை நாடுகிறோம்-2 எதுவும் நிறைவு தருவதில்லை எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை-2 முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான்-2
அறிவும் திறனும் அமைவதில்லை உறவும் நட்பும் தொடர்வதில்லை-2 தேடும் எதுவும் கிடைப்பதில்லை கிடைக்கும் பலமும் நிலைப்பதில்லை-2 முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான்-2
உந்தன் பாதச்சுவடுகளில் இறைவா பயணம் தொடங்குகிறேன் உந்தன் பணிக்காக நான் பலியாக எனை அழைத்தாய் வந்தேனய்யா- உந்தன் உமது பாதையில் பயணம் தொடர்வேன் பயணம் தொடர்வேன்... பயணம் தொடர்வேன்....
அழைத்தவனே என்னை அழைத்தவனே- உந்தன் ஆற்றலை நாடுகின்றேன் உயிர்த்தவனே நின் உயிர்த்த ஆவியால் ஊக்கம் வேண்டுகின்றேன் - அழைத்தவனே புதுச்சமுதாயம் வடிவமைக்கும்- உந்தன் புனித கரங்களாய் மாறிடவே (2)- உந்தன்
மலர்களிலே வண்ண மலர்களிலே உந்தன் நறுமணம் கமழ்வது போல் மணங்களிலும் என் மனதினிலும்- உம் அருள்மனம் சேர்த்தருளும் - மலர்களிலே இதயங்களை நான் ஈர்த்திடுவேன் உந்தன் இனிய வானரசின் உறவாக(2)- உந்தன
புதுராக சந்தத்திலே வண்டுகள் பாடும் ஓடிவரும் ஓடை ஒலி தாளங்கள் போடும்-2 உன் அன்பின் உயரத்தையே மலைகள் சொல்லுமே உன் அன்பின் ஆழத்தையே தாய்மை காட்டுமே இதமான ராகங்களும் என்னில் தோன்றுமே....
ஆயிரம் மனிதரில் என்னைத் தேடினாய் அன்பெனும் சிறகினுள் என்னை மூடினாய் ஆ....ஆ....ஆ....ஆ......ஆயிரம் கண்ணென காத்திட எந்தன் நெஞ்சில் வா வாகவலையின்றி நான் வாழ என்னில் எழுந்து வா -நீயே
விடியுமோ பொழுதென விழிகள் கலங்கலாம் வீணென என் மனம் சோர்ந்து போகலாம் ஆ....ஆ....ஆ....ஆ.....விடியுமோ துணைவரும் அருளினால் என்னைத் தாங்க வா வா துயரின்றி என் விழி மெல்ல மூட நீ வா -நீயே
நன்றி என்று சொல்லி எந்தன் நெஞ்சம் உன்னில் வாழும் எந்த நாளும் உந்தன் அன்பை தேடும் அது துள்ளி வரும் தென்றலிலே புத்தம் புது கவினூறு மன்னவனின் புகழினைப் பாடும்
விழிகளில் தொடர்ந்திடும் ஏக்கம் அது கதிர் கண்ட பனி போல மாறும்-2 இதயத்தில் இனிய ராகங்கள் உதயமாகுமே உள்ளங்களில் நீ வாழ உறவுகள் நான் கூட உன் வாசல் தேடி வருவேன் என் மன்னவனே! - நன்றி
உருவத்தில் தெரிகின்ற தெய்வம் நம்இதயத்தில் வாழ்ந்திட வேண்டும்-2 மனிதரே தெய்வம் வாழ்ந்திடும் கோயில் ஆகுமே புத்தம் புது பூமி ஒன்று நீயும் வந்து வாழ இங்கு உன் வாசல் தேடி வருவேன் என் மன்னவனே !- நன்றி
கடவுளின் உயிருள்ளது ஆற்றல் மிகுந்தது ஆவியில் மலர்ந்தது நல்வழி சேர்ப்பது இதயத்தை அறிவது- கடவுளின்
சோகங்கள் சூழ்ந்திடும் வாழ்வினிலே ஆறுதல் அளித்திடும் வார்த்தையிது-2 நம்பிக்கை இழந்து சோர்ந்தவர்க்கு புது ஒளி தந்திடும் வார்த்தையிது அமைதியை அருளும் வார்த்தையிது ஆற்றலை தந்திடும் வார்த்தையிது- கடவுளின்
துயர்களும் தடைகளும் கடந்து வர துணிவினைத் தந்திடும் வார்த்தையிது-2 நீதியும் அன்பும் நிலைத்து எழ நேர்வழி காட்டிடும் வார்த்தையிது ஏற்றத் தாழ்வுகள் தகர்ந்து விழ சமத்துவம் படைக்கும் வார்த்தையிது - கடவுளின்
ஆரிராரிரோ என் கண்ணே நீ தூங்கு என் அன்பே ஆரமுதே கண்மணியே நீ தூங்கு
அழியாத ஆன்மாவின் விருந்தாகவே என்னில் எழுந்தே நீ வா - உன் ஆன்மீக ராகங்கள் உயிர் வாழவே என்னில் இசை பாடவா கண் இமை மூட மறந்தே நான் காத்திருந்தேன் தெய்வமே செல்வமே- நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே ஓடிவா அருள் கோடி தா
அமுதாக ஆன்மாவில் வருகின்றவா என்னை உருவாக்க வா நல் அணையாத தீபமாய் திகழ்கின்றவா ஆன்ம ஒளியேற்றவா சிறுதிரியாக உலகெங்கும் ஒளியேற்றுவேன் தெய்வமே செல்வமே- நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே ஓடிவா அருள் கோடி தா
நான் தேடும் ஒரு நிறைவு உன்னில் கண்டு கொண்டேன் வான் தேவன் உன் பிறப்பில் உனதன்பு கண்டேன் வாரும் யேசுவே எங்கள் அன்பின் நேசரே
மண் படைத்தாய் விண் படைத்தாய் நிறைவில்லை நிறைவில்லையோ பொன் படைத்தாய் பொருள் படைத்தாய் நிறைவில்லை நிறைவில்லையோ எனைப் படைத்து எழில் படைத்தாய் நிறைவில்லையோ- இறைவா நிறைவடைய எம்மிடையே பிறந்தாயோ - வாரும்
அன்பு இல்லை அமைதி இல்லை எம்மிடையே எம்மிடையே உண்மையில்லை உவகையில்லை உலகினிலே உலகினிலே அன்பு இல்லை அமைதி இல்லை உண்மை இல்லை உவகை இல்லை இந்த நிலை மாறிடவோ அப்ப வடிவிலே- இறைவா மனுவுருவாய் மைந்தர் எம்மில் மலர்ந்தாயோ - வாரும்
இப்படைப்பில் திருப்பலி பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.ஒரு வேளை தேவையானவர்களுக்கு பயனளிக்கலாம்.இவையனைத்தும் கடந்த நான்கு வருடங்களாக தொகுக்கப்பட்டிருக்கும் பாடல்கள்.இவை சம்மந்தமாக படைப்புகள் எவையேனும் இருப்பின் தெரியப்படுத்தலாமே!